SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

RTI கேள்விக்கு இந்தியில் பதில்.. “எனக்கும் இந்தி தெரியாது”: ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி!

2021-07-28@ 13:46:51

சென்னை : தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட கேள்விக்கு இந்தியில் பதிலளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தனக்கும் இந்தி தெரியாது என்று தெரிவித்த நீதிபதி இதுகுறித்து ஒன்றிய அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஞானசேகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில்,தகவல் அறியும் சட்டத்தின் கீழ் புதுவையில் நியமன எம்எல்ஏக்கள் தொடர்பான தகவல்களை ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்திடம் கேட்டேன்.
ஆனால் ஒன்றிய உள்துறை அமைச்சகம் நான்  அனுப்பிய கேள்வி மனுவை திருப்பி அனுப்பியதுடன் இந்தியில்  பதிலளித்தது.  எனக்கு அந்த மொழி தெரியாது.  

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே தெரியும். எனவே, இந்தியில் வழக்கிய பதிலை ரத்து செய்ய வேண்டும். எனக்கு தெரிந்த மொழியில்  மட்டுமே பதில் அளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு  உத்தரவிட வேண்டும்,'என்று கோரியிருந்தார்.இந்த வழக்கு சென்னை நீதிபதி எஸ். வைத்தியநாதன் முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு ஆவணங்களை பார்த்த நீதிபதி தனக்கும் இந்தி தெரியாது என்று தெரிவித்தார். மேலும்,  இதுகுறித்து ஒன்றிய அரசு வருகிற 16ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறும் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

  • cryingroom-19

    இனி வீட்டில் அழுகாதீங்க!: மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்க்க ஸ்பெயினில் 'அழுகை அறை' அறிமுகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்