SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேரவையில் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதை பேச்சுரிமையாக கருத முடியாது : உச்சநீதிமன்றம் காட்டம்!!

2021-07-28@ 12:24:04

டெல்லி : சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவது கருத்து சுதந்திரம் அல்ல என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஜக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியின் போது, நிதியமைச்சராக இருந்த கே.எம்.மாணி சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை கடந்த 2015-ஆம் ஆண்டு மாா்ச் 13ம் தேதி தாக்கல் செய்தாா். அப்போது, ‘மாநிலத்தில் மதுபான பாா்களை அனுமதிக்க லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நிதி அமைச்சா் கே.எம்.மாணி பட்ஜெட் தாக்கல் செய்யக் கூடாது’ என்று எதிா்க்கட்சிகள் போா்க்கொடி உயா்த்தின. இதனால், சட்டப்பேரைவயில் கடும் அமளி ஏற்பட்டது.

அமளிக்கு இடையே அமைச்சா் மாணி பட்ஜெட் தாக்கல் செய்ததாக அறிவித்தாா். இதனால், ஆவேசமடைந்த எதிா்க்கட்சி உறுப்பினா்கள், பேரவைத் தலைவா் இருக்கையை உருட்டி மேடையிலிருந்து கீழே தள்ளி சேதப்படுத்தினா். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சட்டப்பேரவைக்குள் அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சியினரான இடது ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இதனையடுத்து, 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் இடதுசாரி முன்னணி ஆட்சிக்கு வந்தது. பேரவை அமளி வழக்கை ரத்து செய்யக் கோரி கேரள உயா்நீதிமன்றத்தில் அரசு சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை உயா்நீதிமன்றம் கடந்த மாா்ச் 12-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீடு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆா்.ஷா முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ பொதுச்சொத்துக்களை எம்பி, எம்எல்ஏக்கள் சேதப்படுத்துவது கருத்து சுதந்திரம் அல்ல என்று உச்சநீதிமன்றம் கண்டிப்பு தெரிவித்துள்ளது.
மேலும், எம்எல்ஏ, எம்பிக்களுக்கு வழங்கியிருக்கக்கூடிய பதவி என்பது எந்தவிதமான தடையும் இல்லாமல், எதற்கும் பயப்படாமல் அவையில் தங்களுக்கான பொதுப் பணியை செய்வதற்காக தானே தவிர இதுபோன்று கிரிமினல் குற்றங்களில் இருந்து தப்பிப்பதற்கு அல்ல என நீதிபதிகள் கூறினர். தொடர்ந்து பேசிய நீதிபதிகள், பேரவையில் அரசு சொத்துகளுக்கு உறுப்பினர்கள் சேதம் விளைவித்தது அத்துமீறிய செயல் என்றும் எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறுவது என்பது நீதி பரிபாலன நடைமுறையில் குறுக்கிடுவதாகிவிடும் என்று கூறியபடி கேரள அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mahaa12

  100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

 • police-21

  காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

 • kushinagar-modi

  புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

 • train-hotel-20

  செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

 • wax-museum-19

  துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்