SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகன் ரவீந்திரநாத்திற்கு மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்க்கவில்லை; பாஜக தான் முடிவு எடுக்க வேண்டும் : ஓ பன்னீர் செல்வம் பேச்சு

2021-07-28@ 11:51:37

சென்னை : அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது என்று சசிகலா குறித்த கேள்விக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் போடியில் பன்னீர்செல்வம் பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.தேனி மாவட்டம் போடியில் தனது இல்லம் முன்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகிறார். அதேபோல் சேலம் சூரமங்கலத்தில் எடப்பாடி பழனிசாமி பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பி வருகிறார். கோபிசெட்டிபாளையத்தில் ஏ. .கே.செங்கோட்டையன், திண்டிவனத்தில் சிவி சண்முகம் போராட்டம் செய்கின்றனர். அதேபோல் கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ, சென்னை கேகே நகரில் வளர்மதி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் போடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம், ஆடியோ வெளியிட்டு வரும் சசிகலா அதிமுகவை கைப்பற்ற முயற்சி செய்கிறாரா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், “அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது. தனிப்பட்ட நபரோ குடும்பமா கட்சியை வழிநடத்த முடியாது. தனி நபரோ, ஒரு குடும்பமோ ஆதிக்கம் செலுத்த முடியாத நிலையில் நிர்வாகம் செய்து வருகிறோம். ஜனநாயக முறைப்படி கட்சி நடக்கிறது. என்ன முயற்சி எடுத்தாலும், யாராலும் அதிமுகவை கைப்பற்ற முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நான்கரை ஆண்டுகளாக நாங்கள் இருவரும் அதிமுகவை வழி நடத்தி வருகிறோம். மகன் ரவீந்திரநாத்திற்கு மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்க்கவில்லை; பாஜக தான் முடிவு எடுக்க வேண்டும். தேர்தலில் எம்ஜிஆர், ஜெயலலிதாவை முன்னிறுத்தவில்லை என அன்வர் ராஜா கூறியது தவறு.” என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்