SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொறியியல் மாணவர்களின் கவனத்திற்கு... செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட் 18ல் தொடக்கம்... டிசம்பர் 13ல் தேர்வுகள் : அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி

2021-07-28@ 10:53:47

சென்னை : நடப்பு கல்வியாண்டிற்கான பொறியியல் கல்லூரி செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட் 18ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலைக்கழகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான நடப்பு கல்வி ஆண்டின் செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 13ம் தேதி செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நடப்பு செமஸ்டரின் கடைசி வேலை நாள் நவம்பர் 30 என்றும் டிசம்பர் 2ம் தேதி முதல் செய்முறை தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்ட கடந்த 2 நாட்களில் 41,363 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 20,660 மாணவர்கள் விண்ணப்ப கட்டணத்தையும் செலுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கான ரேண்டம் எண்களை ஆகஸ்ட் 25ம் தேதியும் தரவரிசை பட்டியல் செப்டம்பர் 4ம் தேதியும் வெளியிட உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்