விண்வெளியில் நடந்த காமா கதிர் வெடிப்பு அபூர்வ காட்சி பதிவு
2021-07-28@ 00:40:09

புதுடெல்லி: விண்வெளியில் பல ஒளி ஆண்டுகளுக்கு அப்பாற்பட்ட தூரத்தில், காமா கதிர்கள் வெடிக்கும் சம்பவம் மிகவும் அபூர்வமாக நடக்கும். இது, மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த வெடிப்பு குறிப்பிட்ட சில நொடிகள் மட்டுமே நீடிக்கும். இந்த நேரத்தின் அடிப்படையில், நீண்ட நேர வெடிப்பு, குறைந்த நேர வெடிப்பு என அவை அழைக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி இதுபோன்று காமா கதிர்கள் வெடித்த காட்சியை நாசாவின் ‘பெர்மி காமா கதிர் விண்வெளி டெலஸ்கோப்’ மூலமாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இந்த குழுவில் சில இந்திய விஞ்ஞானிகளும் இடம் பெற்றுள்ளனர். இந்த வெடிப்பு இரண்டு நொடிகள் மட்டுமே நீடித்துள்ளது. இருப்பினும், விண்வெளியில் காமா கதிர்கள் வெடிப்பதற்கான காரணத்தை கண்டறிய, இந்த கண்டுபிடிப்பு உதவியாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
நிலவில் 800 கோடி மனிதர்கள் கிட்டத்தட்ட 1 லட்ச ஆண்டுகள் வாழ தேவையான ஆக்சிஜன் இருப்பதாக நாசா தகவல்!!
ஒரே ராக்கெட்டில் 22 செயற்கைகோள்: சீனா சாதனை
ஜப்பான் விஞ்ஞானிகள் ஆய்வில் புது தகவல்: விண்கற்கள் எதனால் ஆனவை?
அணுக்கரு இணைப்பில் அதிக ஆற்றலை கொணர்ந்து சாதனை: ஐரோப்பிய விஞ்ஞானிகளின் முயற்சி வெற்றி..!!!
2022ம் ஆண்டின் முதல் ராக்கெட் :பிஎஸ்எல்வி - சி52 ராக்கெட் 3 செயற்கைக்கோள்களுடன் பிப்.14-ல் விண்ணில் பாய்கிறது!!
கைவிடப்பட்ட ராக்கெட் வரும் மார்ச் 4ம் தேதி நிலவில் மோதுகிறது: ராக்கெட் மோதுவதால் நிலவில் பள்ளம் ஏற்படும் என நாசா தகவல்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!