SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இருபுறமும் சூரிய உருவம் பொறித்தது கீழடியில் கிமு 6ம் நூற்றாண்டு வெள்ளி நாணயம் கண்டெடுப்பு

2021-07-28@ 00:39:49

திருப்புவனம்: கீழடி அகழாய்வில் கிமு 6ம் நூற்றாண்டை சேர்ந்த வெள்ளி நாணயம் கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய இடங்களில் 7ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. கீழடியில் 7, அகரத்தில் 8, கொந்தகையில் 5, மணலூரில் 3 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் முதுமக்கள் தாழிகள், எலும்புக்கூடுகள், உறைகிணறுகள், மூன்று கல் வரிசை கொண்ட சுடுமண் செங்கல்சுவர், மூடியுடன் கூடிய பானைகள், பானை ஓடுகள், குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள், உணவு குவளை உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன.

கீழடியில் ஏற்கனவே தங்கத்தால் ஆன பொருள் கிடைத்த நிலையில், தற்போது சதுர வடிவிலான வெள்ளி நாணயம் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து அகழ்வாய்வாளர்கள் கூறுகையில், ‘‘கீழடியில் கண்டறியப்பட்ட நாணயத்தின் இருபுறமும் சூரியன், நிலவு, விலங்குகள் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இது முத்திரை நாணயம் போன்று பயன்பட்டிருக்க வேண்டும். இது கிமு 2 முதல் 6ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம். எனினும் நாணயத்தின் பயன்பாடு, காலம் உள்ளிட்டவற்றை துல்லியமாக அறிய ஆய்விற்கு அனுப்பப்பட உள்ளது’’ என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்