SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீங்கள் உங்கள் சிறந்த முயற்சியைக் கொடுத்தீர்கள் :வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு பிரதமர் மோடி ஆறுதல்!

2021-07-27@ 13:46:20

டோக்கியோ : ஒலிம்பிக்கில் வாள் வீச்சு போட்டியின் முதல் சுற்றில் வென்று, இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு முதன்முறையாக வெற்றி தேடித் தந்து, அடுத்த சுற்றில் வெளியேறிய இந்திய வாள் வீச்சு வீராங்கனை சி.ஏ.பவானி தேவியின் முயற்சிகளை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

முன்னதாக பவானி தேவி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: 2வது சுற்றில்  உலகின் 3ம் வீராங்கனையுடன் 7-15 என தோற்றேன். நான் என் நிலையை சிறப்பாக செய்தும் வெல்ல முடியவில்லை. என்னை மன்னிக்கவும். ஒவ்வொரு முடிவிலும் ஒரு துவக்கம் இருக்கிறது. நான் எனது பயிற்சியை தொடர்வேன்,' எனப் பதிவிட்டு இருந்தார்.  

இந்த ஒலிம்பிக் வீராங்கனையின் உணர்ச்சிபூர்வமான ட்வீட்டுக்கு பதிலளித்து பிரதமர் ட்வீட் செய்ததாவது:

'நீங்கள் உங்கள் சிறந்த முயற்சியைக் கொடுத்தீர்கள், உங்கள் முயற்சி முக்கியமானது.

வெற்றிகளும் இழப்புகளும் வாழ்க்கையின் ஒரு பகுதி.

உங்கள் பங்களிப்புகளில் இந்தியா மிகவும் பெருமிதம் கொள்கிறது. நீங்கள் நமது குடிமக்களுக்கு உத்வேகம் அளிக்கிறீர்கள். ' எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்