SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கான, அனைத்து இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கான 27 % உடனடியாக வழங்குக: டி.ஆர்.பாலு, எம்.பி., கடிதம்

2021-07-27@ 12:13:51

டெல்லி: மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கான, அனைத்து இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீதத்தை உடனடியாக வழங்குக என ஒன்றிய சுகாதார அமைச்சருக்கு டி.ஆர்.பாலு, எம்.பி., கடிதம் அனுப்பியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளரும், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவருமான,  டி.ஆர்.பாலு,  27 சதவீத ஒதுக்கீடு குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர மன்சுக் மாண்டவியாவுக்கு கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகிய அனைவருக்குமான வளர்ச்சியை உறுதிப்படுத்துவதில் தமிழக அரசு, பன்னெடுங்காலமாக, சமூக நீதிக் கொள்கையை கடைப்பிடித்து வருவது, தாங்கள் அறிந்ததே என்றும், ஒன்றிய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களில், ஏற்கனவே 27 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வரும் நிலையில், அனைத்து இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் மட்டும், ஏன் 27 சதவீதம் அளிக்கப்படுவதில்லை? என சென்னை உயர்நீதிமன்றம், இந்திய மருத்துவக் குழுவிடம் கடந்த 2020 ஆண்டே கேள்வி எழுப்பியுள்ளது.


அனைத்து இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், கடந்த 2017 ஆண்டு முதல் 2020 ஆண்டு வரை, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படாத காரணத்தால், 11,000க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்., பி.டி.எஸ். மற்றும் எம்.டி.எஸ். படிப்புகளில் சேர்வதற்கு, வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார், 40-க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான சங்கங்கள், அப்போதைய ஒன்றிய சுகாதார அமைச்சருக்கு கோரிக்கைகள் அளித்த பின்னரும், ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்காதது ஏன்? என்று தனது கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உடனடியாக தலையிட்டு, பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீதத்தை, அனைத்து இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பெற்றுத் தர, ஆணையிட வேண்டும் என்று, திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • wildfire-13

    கலிபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: 13,400 ஏக்கர் காடுகள் தீயில் கருகி நாசம்..!!

  • plane-crashe-13

    அமெரிக்காவில் குடியிருப்பு மீது விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்!: ஏராளமான வாகனங்கள், வீடுகள் தீக்கிரை..2 பேர் பலி..!!

  • wine-12

    இஸ்ரேலில் மண்ணில் புதையுண்டு கிடந்த 1,500 ஆண்டுகள் பழமையான ஒயின் தயாரிப்பு ஆலை கண்டெடுப்பு..!!

  • Tiruppp1

    திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்... கண்கவர் புகைப்படங்கள்!!

  • andhratirupp

    திருமலை ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்பித்த ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்