SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா பரவலால் பக்தர்கள் இன்றி நடைபெற்ற தூத்துக்குடி பனிமய மாதா ஆலய கொடியேற்றம்..!!

2021-07-26@ 10:47:40

தூத்துக்குடி:உலகப்புகழ் பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தின் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு அறிவித்த கொரோனா கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் இன்றி கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக பனிமய மாதா ஆலயத்தின் 439ம் ஆண்டு திருவிழாவிற்கான கொடியேற்றும் நிகழ்ச்சியில் கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பங்கு தந்தை குமாரராஜா தலைமையில் நடைபெற்ற விழாவில் அதிகாலையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதை தொடர்ந்து மாதா உருவம் பொறித்த கொடியை ஊர்வலமாக கொண்டு வந்து பேராலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் ஏற்றினர்.

தூத்துக்குடி கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் மாவட்டம் முழுவதும் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கோயிலை சுற்றிலும் தடுப்பு அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். ஆகஸ்ட் 5ம் தேதி வரை 10 நாட்கள் ஆண்டு திருவிழா நடைபெற உள்ளது. இந்த ஆண்டு தேரோட்டம், பவனி ஆகிய நிகழ்வுகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நிகழ்ச்சிகளும் தொலைக்காட்சிகள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று காரணமாக இரண்டு வருடங்களாக பக்தர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்