SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு தொடக்கம்: செப் 7 முதல் அக்டோபர் 4ம் தேதி வரை கலந்தாய்வு..!

2021-07-26@ 08:42:36

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு தொடங்கியது. பொறியியல் படிப்புகளில் சேர www.tneaonline.org என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் கொரோனா காரணமாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி அடைவதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மாணவர்கள் மேற்படிப்புக்காக கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் பி.இ., பி.டெக் படிப்புகளில் சேருவதற்கு இன்று முதல் விண்ணப்ப பதிவு தொடங்குகிறது. அத்துடன் www.tneaonline.org  இணைய தள வழியாக வருகிற ஆக 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதை தொடர்ந்து செப் 4-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, ஆக 25ஆம் தேதி ரேண்டம் எண் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பொறியியல் கலந்தாய்வு வருகிற செப் 7ஆம் தேதி முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.

அத்துடன் அக் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை துணைக் கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது. இதேபோல் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரவும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். தமிழகத்திலுள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் வருகிற 10 ஆம் தேதி வரை ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

  • iceland-16

    ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

  • dolphins-15

    டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்