SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பருத்திப்பட்டு கிராமத்தில் 320 பேருக்கு இலவசபட்டா : அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்

2021-07-26@ 01:07:36

ஆவடி: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு கிராமத்தில் 320 வீடுகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வழங்கினார். ஆவடி மாநகராட்சி, 16வது வார்டு, பருத்திப்பட்டு கிராமத்தில் 1000க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. இதையடுத்து, அப்பகுதி மக்கள் கலெக்டர் உள்பட அனைத்து அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்து வந்தனர். ஆனாலும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், நடந்து முடிந்து சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, திமுக ஆட்சி அமைத்த பிறகு ஆவடி தொகுதி எம்எல்ஏவும், பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசரிடம் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

 இந்த மனு பரிசீலனை செய்யப்பட்டு, ஒரு வாரத்தில், அவர் அதிகாரிகளிடம் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி, ஆவடி தாலுகா அதிகாரிகள் பருத்திப்பட்டு கிராமத்துக்கு சென்று, ஆய்வு செய்தனர்.  இதைதொடர்ந்து, முதல் கட்டமாக 320 வீடுகளுக்கு பட்டா வழங்க முடிவு செய்தனர். இதையொட்டி, பருத்திப்பட்டு கிராமத்தில் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், 320 வீடுகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.  அப்போது, அவருக்கு கிராம பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மேலும், திமுக உள்பட  அரசியல் கட்சி பிரமுகர்கள் சால்வை அணித்து பாராட்டினர்.  ஆவடி வட்டாட்சியர் செல்வம், தனி வட்டாட்சியர் வில்சன், ஆவடி மாநகர செயலாளர் ஜி.ராஜேந்திரன், வட்ட செயலாளர் தா.வின்சென்ட், வார்டு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

  • iceland-16

    ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

  • dolphins-15

    டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்