SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி பாயின்ட்...

2021-07-26@ 00:03:27

* மோசமான வானிலை காரணமாக நாளை ஒலிம்பிக் தனிநபர் வில்வித்தை போட்டி நடைபெறும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* ஆண்கள் 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் தகுதிச் சுற்றில் ஒட்டுமொத்தமாக 27வது இடம் பிடித்த இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ் அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை நழுவவிட்டார்.
* ஒலிம்பிக் மகளிர் டென்னிஸ் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் நேற்று களமிறங்கிய இந்தியாவின் சானியா மிர்சா - அங்கிதா ரெய்னா ஜோடி 6-0, 6-7 (0-7), 8-10 என்ற செட் கணக்கில் உக்ரைன் சகோதரிகள் நடியா கிச்செனோக் - லியுட்மிலா கிச்செனோக் இணையிடம் போராடி தோற்றது.
* ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகள் பரிசளிப்பு நிகழ்ச்சியின்போது முகக்கவசம் இல்லாமல் போஸ் கொடுக்க 30 விநாடி அவகாசம் அளிக்கப்படுவதாக நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.
* ஒலிம்பிக் ஆண்கள் கால்பந்து போட்டியின் சி பிரிவு லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் எகிப்து அணியை நேற்று வீழ்த்தியது. பிரேசில் - ஐவரி கோஸ்ட் அணிகள் மோதிய டி பிரிவு லீக் ஆட்டம் 0-0 என டிராவில் முடிந்தது.
* டபுள் ஸ்கல்ஸ் லைட் வெயிட் துடுப்புப் படகு போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் லால் ஜாட் - அரவிந்த் சிங் இணை அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
* ஆண்கள் கூடைப்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனும் 15 முறை தங்கப் பதக்கம் வென்ற அணியுமான அமெரிக்கா 76-83 என்ற புள்ளிக் கணக்கில் பிரான்ஸ் அணியிடம் நேற்று அதிர்ச்சி தோல்வி கண்டது.
* புடாபெஸ்ட் நகரில் நடக்கும் உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவின் பிரியா மாலிக் 73 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். பைனலில் செனியா படபோவிச்சுடன் மோதிய பிரியா 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி சாதனை படைத்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iceberg-boat-23

  இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

 • thailand-taxi-23

  தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

 • haiti-refugees-21

  ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

 • drone-21

  புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்