SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேசமே முதலில்; எப்போதும் முதலில்... இந்தியாவை ஒருங்கிணைப்போம்: மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

2021-07-26@ 00:03:11

புதுடெல்லி: ‘தேசமே முதலில், எப்போதும் முதலில்’ என்ற தாரக மந்திரத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி, மகாத்மா காந்தி வழியில் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் ‘இந்தியாவை ஒருங்கிணைப்போம்’ என்ற சிந்தனையுடன் முன்னேற அழைப்பு விடுத்துள்ளார். நடப்பு மாதத்தின் கடைசி ஞாயிறான நேற்று அகில இந்திய வானொலியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அவர் கூறியதாவது: வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி, இந்தியா தனது 75வது சுதந்திர ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த சமயத்தில் அனைவரும் ஒற்றுமையுடன், தேசத்தை வளர்ச்சி நோக்கி முன்னெடுத்துச் செல்ல கைகோர்க்க வேண்டியது அவசியம். மகாத்மா காந்தி ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை நடத்தியதைப் போல ஒவ்வொரு இந்தியனும் ‘இந்தியாவை ஒருங்கிணைப்போம்’ இயக்கத்தை வழிநடத்திச் செல்ல வேண்டும். இது வேற்றுமைகள் நிறைந்த நம் தேசம் ஒன்றுபட்டிருக்க உதவும்.

‘தேசமே முதலில், எப்போதும் முதலில்’ என்ற தாரக மந்திரத்துடன் நாம் ஒன்றாக முன்னேறிச் செல்ல வேண்டும். டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் நமது இந்திய வீரர், வீராங்கனைகளை நாம் உற்சாகப்படுத்தி ஊக்கமளிக்க வேண்டும். நாளை (இன்று) கார்கில் போர் தியாகிகள் தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதில், நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களுக்கு நாம் அஞ்சலி செலுத்த வேண்டும். மன்கி பாத் நிகழ்ச்சியை கேட்பவர்களில் 75 சதவீதம் பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது ஒரு நல்ல அறிகுறியாகும். ஆகஸ்ட் 7ம் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. கைத்தறி தயாரிப்புகளே கிராமப்புற மற்றும் பழங்குடியின பகுதி மக்களின் முக்கிய வருவாயாகும். எனவே, அனைவரும் கைத்தறி ஆடைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* நீலகிரி ராதிகாவுக்கு பாராட்டு
நீலகிரியை சேர்ந்த ராதிகா என்பவர், ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டினார். அவர் கூறுகையில், ‘‘குன்னூரில் கபே நடத்தி வரும் ராதிகா, தனது நண்பர்களுடன் சேர்ந்து, நிதி திரட்டி, இன்று நீலகிரி மலைப்பகுதியில் 6 ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை வழங்கி வருகிறார். போக்குவரத்து வசதி இல்லாத மலைப்பகுதிகளில் உள்ள நோயாளிகளுக்கு அவசர காலத்தில் மிகுந்த உதவியாக ஆட்டோ ஆம்புலன்ஸ்கள் உள்ளன. எனவே, ராதிகாவுக்கு எனது பாராட்டுகளும், வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறோம். நாமும் நமது பணிகளுக்கு இடையே இதுபோன்ற சேவைகளை செய்ய வேண்டும்,’’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • haiti-refugees-21

  ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

 • drone-21

  புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

 • iceland-16

  ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

 • dolphins-15

  டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்