SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலை கட்சி ஒப்பந்ததாரர்களுக்கு 12 கோடி டெண்டரை கமுக்கமாக முடித்த அதிகாரிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-07-24@ 02:27:41

‘‘உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்ற நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி தலைவர் பதவியை பிடிக்க அதிமுக, பா.ஜ.வில் இப்போதே கடும் போட்டி தொடங்கியிருக்காமே...’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
 ‘‘உண்மைதான்.. பெண்களுக்கான ஒதுக்கீடு என்பதால், தங்களுக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அதிமுகவில் இருந்து கட்சி மாற இருந்த பெண் நிர்வாகிகள் கூட அந்த முடிவை தள்ளி வைத்துள்ளார்களாம். பா.ஜ.வில் வழக்கமாக முன்னாள் நகராட்சி தலைவர் மீனாதேவ் தான், தலைவர் பதவிக்கு களமிறக்கப்படுவார். அப்போதெல்லாம் கட்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கை ஓங்கி இருந்தது. இதனால் அவர் சுட்டிக்காட்டுபவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.   அந்த வகையில் பொன். ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளரான மீனாதேவுக்கு எளிதாக  தலைவர் பதவிக்கான சீட்  கிடைத்தது. ஆனால் இந்த முறை கட்சியில் பொன். ராதாகிருஷ்ணனுக்கு முக்கியத்துவம் குறைவாக உள்ளது. சமீபத்தில் அவர் படமே இல்லாமல் போஸ்டர் அடித்துள்ளனர்.

அந்தளவுக்கு செல்வாக்கு சரிந்துள்ளதால் இந்த முறை மாநகராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளரும் மாற வாய்ப்பு இருப்பதாக பேசிக் கொள்கிறார்கள். அதுவும் கட்சியில்  செல்வாக்கு கொண்டவராக  தற்போது திருநெல்வேலி தொகுதி எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பார்க்கப்படுகிறார். புதிய தலைவரான அண்ணாமலை, தலைவராக இருந்து மத்திய அமைச்சராகி உள்ள முருகன் ஆகியோருடன் நயினார் நாகேந்திரன் இணக்கமாக இருப்பதால், இவரை பிடித்தால் தான் வேட்பாளராக களமிறங்க முடியும் என்ற நம்பிக்கையில் , நெல்லையை நோக்கி குமரி பா.ஜ.வினர் படையெடுப்பு தொடங்கி உள்ளதாம். இவருடன் இருக்கும் புகைப்படங்களை பேஸ்புக், வாட்ஸ் அப்பில் பரப்பி விட்டு நானும் இவர் ஆதரவாளர் தான் என்பதை  சொல்லாமல் சொல்கிறார்களாம். இவை அனைத்தையும் பொன். ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் அமைதியாக கவனித்து வருகிறனர். அண்ணாச்சிக்கு செல்வாக்கு சரியவில்லை. விரைவில் அவர் அதிரடியை காட்டுவார் என கூறி வருகிறார்கள்’’ என்றார் விக்கியானந்தா.

 ‘‘இலைகட்சி  ஒப்பந்ததாரர்களுக்கு ஒதுக்கீடு செய்த பழைய விசுவாச அதிகாரிகள் இப்போ  பீதியில் இருக்கிறார்களாமே.. அது என்ன விஷயம்..’’ என்று கேட்டார் பீட்டர்  மாமா.
 ‘‘கடலோர  மாவட்டமான ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் பிரதம மந்திரியின் சாலை  மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலைகள் போடுவதற்காக ரூ.12 கோடிக்கு சமீபத்தில்  டெண்டர் விடப்பட்டதாம். இந்த திட்டம் கோடி என்பதால் இ-டெண்டர்  மூலம் தான்  ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தம் கோர வேண்டும். ஆனால்  இந்த துறையை சேர்ந்த  அதிகாரிகள், பழைய பாசத்தில் இலை கட்சியை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் 5 பேரை  அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து தனக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கி  கொண்டு இ-டெண்டரை பதிவு செய்ய அனுமதி வழங்கினார்களாம். இணையவழி   வாயிலாக டெண்டர் கோராமல் அலுவலகத்திற்கு நேரிடையாக வரவழைத்து இலைகட்சியை  சேர்ந்தவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட தகவல் அந்த அலுவலகம் மூலம் வெளியில்  கசிய தொடங்கியதால் மற்ற ஒப்பந்ததாரர்கள் அதிர்ச்சிக்குள்ளானர்கள். அரசு துறையில் உள்ள ஒரு சில  அதிகாரிகள் இன்னும் இலை கட்சிகாரர்களுக்கு தான் விசுவாசமாகவே உள்ளனர்.  இதுபோல் உள்ள அதிகாரிகள் உடனடியாக மாற்றப்படும் வேண்டும் என முதல்வரின்  தனிபிரிவுக்கு மற்ற ஒப்பந்ததாரர்கள் புகார் மனு அனுப்பியுள்ளனர். இந்த  தகவல் தெரிந்த இலைகட்சி விசுவாசியான அதிகாரிகள் கிலியில் உள்ளார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

  ‘‘அமைச்சர் ஆய்வில் சிக்கி திணறினாராமே கான்டிராக்டர்..’’
 ‘‘ஆமாம்...மாங்கனி  நகரில் பிரசித்தி பெற்ற கோட்ைட மாரியம்மன் கோயிலில் அறநிலையத்துறை  அமைச்சர் ஆய்வு செய்தார். கடந்த ஆட்சியில் ஒப்பந்தம் எடுத்த காண்டிராக்டர்,  கட்டுமான பணியை ஆமை வேகத்தில் நடத்தி வருவதை அறிந்தார். அதுவும்  அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு பணியை கூட முழுமையாக முடிக்காம அரைகுறையாக  இருப்பதை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அமைச்சருக்கு, பெரிய டிவிஸ்டாக  கல் தூண் அருகே கான்கிரீட் தூணும் கட்டி வந்ததை பார்த்து அதிர்ந்து  போனாராம். ஏன் இப்படி ஒரு மண்டபம் கட்டுகிறாய் என கேள்வி எழுப்பிய  அமைச்சரிடம், அது அப்படி, இது இப்படி என திணறினாராம் காண்டிராக்டர். உடனே,  முதலில் கோயில் புளு பிரிண்ட், மாஸ்டர் பிளானை என்னிடம் கொடுங்கள் என  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அங்கிருந்து புறப்பட்டாராம். விஷயம் தெரிந்த  அமைச்சர்கிட்ட மாட்டிக்கிட்டோமே என காண்டிராக்டரும், அதிகாரிகளும்  புலம்பியதை பக்தர்கள் பார்த்து ஆச்சரியமடைந்தாங்களாம்’’ என்றார்  விக்கியானந்தா.

 ‘‘தூங்கா நகர விவகாரம் என்ன..’’
‘‘அதிமுக  ஆட்சியின்போது தூங்கா நகர மாநகராட்சியின் மேற்பார்வை பொறியாளர் திடீரென  பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தெர்மகோல் புகழ் மாஜி  அமைச்சரின் தீவிர ஆதரவாளராகவே வலம் வந்த மாநகராட்சி செயற்பொறியாளர்,   கூடுதலாக மாநகராட்சியின் மேற்பார்வை பொறியாளராக கடந்த 2 ஆண்டாக பணியாற்றி   வந்தார். முன்னாள் மேயருக்கும் வலதுகரமாக செயல்பட்டு வந்தார். ஸ்மார்ட்  சிட்டி திட்டப்பணிகளில் நடந்த முறைகேட்டில், இவருக்கும் பெரும்பங்கு  உள்ளது. மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள இவரது அறையில் 2 ஆண்டுகளுக்கு  முன்பு, லஞ்ச ஒழிப்பு  போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் தங்கம்,  வெள்ளி பொருட்கள் கிலோ கணக்கில் சிக்கியது. பல லட்சம் ரூபாயும் சிக்கியது.  மாஜி அமைச்சர் தலையீட்டால் மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது ஆட்சி  மாற்றத்திற்கு பின்பு நேற்று, இவர் பணியிறக்கம் செய்யப்பட்டார். புதிய  அரசு தங்கம் சிக்கிய விவகாரத்தை கிளறுமோ, ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேட்டை  தோண்டுமோ என்ற அச்சத்தில் இருக்கிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iceberg-boat-23

  இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

 • thailand-taxi-23

  தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

 • haiti-refugees-21

  ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

 • drone-21

  புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்