SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனா வைரஸ் சும்மா ஜூஜூபி மூக்கில் 1000 மடங்கு டெல்டா வைரஸ்: சுவாசப்பாதை நாசத்துக்கு முக்கிய காரணம்

2021-07-24@ 01:12:23

புதுடெல்லி: சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், பல்ேவறு நாடுகளில் பல்வேறு உருமாற்றங்களை அடைந்துள்ளன. ஆனால், அவற்றை எல்லாவற்றையும் விட இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா டெல்டா வைரஸ்தான் இப்போது உலகத்தை அதிகமாக ஆட்டிப்படைக்கிறது.
 தற்போது 115 நாடுகளில் இந்த வைரஸ் தாக்குதல் உள்ளது. மேலும், உலக நாடுகளில் சமீபத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட வைரசை பரிசோதனை செய்ததில், 75 சதவீதம் பேர் டெல்டா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிந்துள்ளது.

இந்நிலையில், சீனாவில் இருந்து பரவிய அசல் கொரோனா வைரசை விட, மனிதனின் சுவாசப்பாதையை டெல்டா வைரஸ் கடுமையாகவும், அதிகமாகவும் தாக்குவது தெரிய வந்துள்ளது.  உருமாறிய டெல்டா வைரஸ் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய இயக்குனர் ரோசெல் வாலென்ஸ்கி நேற்று கூறுகையில், ``இதற்கு முந்தைய உருமாறிய கொரோனா வைரஸ்களை விட டெல்டா வகை வைரஸ் மிக ஆபத்தானது. உருமாறிய டெல்டா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் சுவாசப் பாதையில் அதிவேகமாக பரவக் கூடிய ஆயிரம் மடங்கு டெல்டா வைரஸ்கள் உள்ளன. சுவாசப் பாதையை மிக வேகமாக பாதிக்க கூடிய இது போன்ற வைரசை கண்டதில்லை,’’ என்றார்.

டிசம்பருக்குள் 135 கோடி தடுப்பூசி
மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் நேற்று அளித்த எழுத்து பூர்வமாக பதிலில், ‘தற்போது நாட்டில் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக்-வி ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. தடுப்பூசி பற்றாக்குறை குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை. உள்நாட்டில் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுடன் ஒன்றிய அரசு கொள்முதல் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆகஸ்ட் முதல் டிசம்பருக்குள் 135 கோடி தடுப்பூசி கிடைக்கும்,’ என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்