SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தண்ணீர் பஞ்சமில்லை

2021-07-24@ 00:05:41

கர்நாடக மாநிலம் காவிரி நீரை தராமல் அடம்பிடித்து வந்த காலகட்டத்தில் பல்வேறு போராட்டங்களை தமிழக விவசாயிகள் மேற்கொண்டனர். காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் நியாயம் கிடைப்பதற்காக காவிரி  ஆணையம் அமைக்கப்பட்டு தமிழகத்துக்கு ஆண்டுதோறும் கிடைக்க வேண்டிய தண்ணீரின் உரிமை நிலைநாட்டப்பட்டது. இதற்கிடையில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக மாநில அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தாலும், வழக்கு தொடர்ந்தாலும் அவர்கள் தங்கள் முயற்சியில் இருந்து பின்வாங்குவதாக தெரியவில்லை. மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் காவிரி உபரி நீரை சேமித்து பெங்களூரு குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்த அணை கட்டப்படுகிறது என்றும் கர்நாடக அரசு வலியுறுத்தி வருகிறது.
இப்பிரச்னையை இருமாநில அரசும் சட்டப்பூர்வமாக சந்தித்து வருகின்றன.இந்நிலையில், தென்மேற்கு பருவமழை கர்நாடகாவில் தீவிரமடைந்துள்ளதால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தமிழக-கர்நாடக விவசாயிகளின் உயிர்நாடியாக கருதப்படும் கபினி, கே.ஆர்.எஸ் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

குடகு மாவட்டம் தலைக்காவிரி மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை தொடர்வதால் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகாவில் உள்ள கபினி அணைக்கும், மண்டியா மாவட்டம் கண்ணம்பாடி பகுதியில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கும் நீர்வரத்து அதிக அளவு வந்து கொண்டுள்ளது. இதையடுத்து கடல்மட்டத்தில் இருந்து 2,800 அடி உயரம் கொண்ட கபினி அணை நிரம்பியது. இந்த அணைக்கு விநாடிக்கு 23 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதேபோன்று 124.80 அடி உயரம்  கொண்ட  கே.ஆர்.எஸ்  அணைக்கு 20 ஆயிரத்து 796 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு 36 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் இரு அணைகளில் இருந்தும் 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரை திறப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் இருமாநில விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.  
கபினியில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கபிலா ஆறு வழியாகவும், கே.ஆர்.எஸ். அணையில் திறந்து விடப்படும் தண்ணீர் காவிரி ஆறு வழியாகவும் வந்து மைசூரு மாவட்டம் டி.நரசிபுரா பகுதியில் உள்ள திருமாகூடலு பகுதியில் ஒன்றாக சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகத்திற்குள் நுழைகிறது. இந்தாண்டு தென் மேற்கு பருவமழை இப்படியே கைகொடுத்தால்  தமிழக, கர்நாடக விவசாயிகளுக்கு தண்ணீர் பஞ்சமிருக்காது என்பது நிதர்சனம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்