SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறப்பாக பணிபுரிந்தால் 'மெர்சிடிஸ் பென்ஸ்' கார் பரிசு!: ஹெச்.சி.எல். அறிவிப்பால் ஊழியர்கள் குதூகலம்..!!

2021-07-22@ 12:11:21

டெல்லி: பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் மிக சிறப்பாக பணிபுரியும் பணியாளர்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் காரை பரிசாக தர திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் நிர்வாக குழு ஒப்புதல் அளித்தவுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி அப்பாராவ் தெரிவித்துள்ளார். இந்நிறுவனம் தனது பணியாளர்களை ஊக்குவிக்க பென்ஸ் காரை பரிசாக வழங்குவது முதல்முறை அல்ல. கடந்த 2013ம் ஆண்டு 50 பணியாளர்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் காரை பரிசாக அளித்துள்ளது.

பின்னர் நிறுத்தப்பட்டுள்ள இந்த நடைமுறையை ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் தற்போது மீண்டும் செயல்படுத்த உள்ளது. நிர்வாக குழுவின் அனுமதி கிடைத்தபின் இந்த திட்டம் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் இந்நிறுவனம் இந்த ஆண்டு 22,000 பேரை புதிதாக பணியில் சேர்க்க திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் ஹெச்சிஎல் நிறுவன ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, புதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்றால் கட்டாயம் 20 சதவீதம் அதிக தொகையை செலவிட வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதை குறைக்கும் வகையில் திறன் வாய்ந்த ஊழியர்களை தக்க வைக்க சிறப்புமிக்க பரிசுகளையும், ஊக்கத்தொகையும் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china-1000-rains

    சீனாவில் 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த பெருமழை!: தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்..!!

  • girlss_saydi

    சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண் ராணுவத்தினர்!!

  • amesaann11

    அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸின் முதல் விண்வெளி சுற்றுலா பயணம் : மெய்சிலிர்க்க வைக்கும் படங்கள்!!

  • marina-sculptures22

    மெரினாவின் அழகை மெருகூட்டும் பிரம்மாண்ட உலோக சிற்பங்கள்!: சென்னை மாநகராட்சியின் சிறந்த முயற்சி..!!

  • 5starrrr

    5 -ஸ்டார் ஹோட்டல்.. பிரார்த்தனை கூடம், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை : விமான நிலையம் பாணியில் குஜராத் ரயில் நிலையம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்