பெகாசஸ் மென்பொருள் மூலம் செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..!!
2021-07-22@ 10:27:53

டெல்லி: பெகாசஸ் மென்பொருள் மூலம் செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்களின் செல்போன்கள் வேவு பார்க்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருக்கிறார். அதில், பெகாசஸ் மென்பொருள் மூலமாக பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சியினர், சமூக செயற்பாட்டாளர்கள், சூழலியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரது செல்பேசிகள் ஒட்டுகேட்கப்பட்டது தொடர்பான புகாரை விரிவாக விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும் உச்சநீதிமன்றத்தின் நேரடியான கண்காணிப்பின் கீழ் சிறப்பு நிபுணர்கள் கொண்ட குழு ஒன்றினை அமைத்து யாருடைய செல்பேசிகள் எல்லாம் ஒட்டுகேட்கப்பட்டது, எவ்விதமான தகவல்கள் திருடப்பட்டது, யார்யார் எல்லாம் இதில் உடந்தையாக இருந்தனர், நாட்டின் பாதுகாப்பு நலனுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் இருக்கிறதா உள்ளிட்ட விவரங்களை விரிவாக விசாரிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எதிர்கட்சிகளை சேர்ந்தவர்களின் அடுத்தடுத்து பெகாசஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இந்த மனுவானது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மின்னணு இயந்திரம் தவறான பயன்பாடு ஜனநாயகத்திற்கு கடும் சவால் 11 எதிர்க்கட்சிகள் தீர்மானம்
சுதந்திர தின விழாவில் பயங்கரவாத சதியா? இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் இளம்பெண் கைது: ஐதராபாத், நேபாளத்தில் இருந்து உதவிய வாலிபர்கள்
இந்திய விளையாட்டு துறையின் பொற்காலம் விரைவில் ஆரம்பம்: பிரதமர் மோடி நம்பிக்கை
இன்று மாலை ஜனாதிபதி முர்மு சுதந்திர தின உரை
காஷ்மீரில் தீவிரவாத தொடர்பு முஜாகிதீன் தலைவன் மகன், 3 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்
ஆர்எஸ்எஸ் டிபி.யில் தேசியக் கொடி படம்: சர்ச்சைக்குப் பிறகு திடீர் மாற்றம்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!