SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம்

2021-07-22@ 09:52:37

டெல்லி: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தை டெல்லியில் விவசாயிகள் தொடங்கியுள்ளனர். 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளாக இருக்கக்கூடிய காசிப்பூர், டிக்ரித், சிங்கு உள்ளிட்ட இடங்களில் தொடர் போராட்டம் என்பது கடந்த நவம்பர் 26ஆம் தேதியில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது.

கிட்டத்தட்ட 7 மாதங்களை இந்த போராட்டங்கள் நிறைவு செய்தாலும் 3 வேளாண் சட்டங்கள் என்பது இதுவரை திரும்ப பெறப்படாமல் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் என்பது தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் இன்றைய தினம் நாடாளுமன்றத்தின் அருகேயுள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் காலை சரியாக 11 மணி முதல் மாலை 5 மணி வரை போராட்டத்தில் ஈடுபட இருக்கிறார்கள்.

இதையொட்டி டெல்லியின் முக்கிய எல்லைகள் மற்றும் நாடாளுமன்றம் அருகே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட போலீசார் துணை ராணுவ படையினர் சிறப்பு காவல் படையினர் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒருபுறம் காலை 11 மணிக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் அதேநேரத்தில் அதன் அருகிலேயே விவசாயிகளின் போராட்டமும் தொடங்க இருக்கிறது. இதனால் டெல்லி முழுவதும் இன்று பாதுகாப்பு உச்சகட்டமாக போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china-1000-rains

    சீனாவில் 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த பெருமழை!: தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்..!!

  • girlss_saydi

    சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண் ராணுவத்தினர்!!

  • amesaann11

    அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸின் முதல் விண்வெளி சுற்றுலா பயணம் : மெய்சிலிர்க்க வைக்கும் படங்கள்!!

  • marina-sculptures22

    மெரினாவின் அழகை மெருகூட்டும் பிரம்மாண்ட உலோக சிற்பங்கள்!: சென்னை மாநகராட்சியின் சிறந்த முயற்சி..!!

  • 5starrrr

    5 -ஸ்டார் ஹோட்டல்.. பிரார்த்தனை கூடம், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை : விமான நிலையம் பாணியில் குஜராத் ரயில் நிலையம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்