SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காலாவதியான பொருட்கள் விற்ற கடைக்கு ரூ.5000 அபராதம்: அதிகாரிகள் எச்சரிக்கை

2021-07-22@ 00:41:53

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை அனந்தநாயகி நகரை சேர்ந்தவர் தேவபிரசாத்(45). உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவர் வீட்டில் ஞாயிறுதோறும் ஜெபம் செய்வது வழக்கம். அப்போது அங்கு வரும் குழந்தைகளுக்கு சாக்லெட், பிஸ்கட் கொடுப்பார். அதற்காக வண்ணாரப்பேட்டை தெலுங்கு செட்டி தெருவில் உள்ள அம்மன் டிரேடர்ஸ் என்ற கடையிலிருந்து சாக்லேட் வாங்கிச் சென்று குழந்தைகளுக்கு கொடுத்தார். அதை சாப்பிட்ட குழந்தைகள் திடீரென மயக்கமும், வாந்தியும் எடுத்தனர். இதனால் அந்த சாக்லேட்டை பார்த்தபோது அது காலாவதியானது என தெரியவந்தது. இதுகுறித்து அவர் மாநகராட்சி அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகாரளித்தார்.

அதன்பேரில் அதிகாரிகள் அந்த கடையை சோதனை செய்தபோது கடையில் ரூ.15 ஆயிரம் மதிப்பில் சாக்லேட்டுகள் காலாவதியாகி இருந்தது தெரியவந்தது. காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்ததற்காக அதிகாரிகள் அந்த கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரிக்கை செய்தனர்.  இதேபோல் கடந்த வாரம் தண்டையார்பேட்டை இளைய முதலி தெருவில் உள்ள மாநகராட்சி பூங்காவிற்கு எதிரே காலாவதியான பிஸ்கட் சாக்லேட் கொட்டப்பட்டிருந்தது. இதனை அந்த பகுதி உள்ள சிறுவர்கள் சாப்பிட்டு மயக்கம், வாந்தி எடுத்தனர். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அதிகாரிகள் அந்த காலாவதியான சாக்லேட், பிஸ்கட் ஆகியவற்றை பறிமுதல் செய்து கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கொட்டி அழித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china-1000-rains

    சீனாவில் 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த பெருமழை!: தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்..!!

  • girlss_saydi

    சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண் ராணுவத்தினர்!!

  • amesaann11

    அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸின் முதல் விண்வெளி சுற்றுலா பயணம் : மெய்சிலிர்க்க வைக்கும் படங்கள்!!

  • marina-sculptures22

    மெரினாவின் அழகை மெருகூட்டும் பிரம்மாண்ட உலோக சிற்பங்கள்!: சென்னை மாநகராட்சியின் சிறந்த முயற்சி..!!

  • 5starrrr

    5 -ஸ்டார் ஹோட்டல்.. பிரார்த்தனை கூடம், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை : விமான நிலையம் பாணியில் குஜராத் ரயில் நிலையம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்