SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பி.பார்ம் படித்தவர்களுக்கு மருந்தாளுனர் பணி அரசின் முடிவு மகிழ்ச்சியளிக்கிறது: அன்புமணி வரவேற்பு

2021-07-22@ 00:29:36

சென்னை: பி.பார்ம் படித்தவர்களுக்கு மருந்தாளுனர் பணிஅரசின் முடிவு மகிழ்ச்சியளிக்கிறது என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி வரவேற்றுள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், ‘‘தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுனர் பணிக்கு பி.பார்ம் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மருந்தாளுனர் பணிக்கு பி.பார்ம் படித்தவர்களையும் பரிசீலிக்க வேண்டும் என்று கடந்த 11ம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதையேற்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் மிகப்பெரிய அநீதி களையப்பட்டிருக்கிறது. மருந்தாளுனர் பணிக்கான கல்வித் தகுதியில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தால், வேறு அரசு பணி வாய்ப்பு இல்லாத பல்லாயிரக்கணக்கான பி.பார்ம் பட்டதாரிகள் பயனடைவார்கள். அவர்கள் வாழ்வில் புதிய வெளிச்சம் பரவட்டும்’’ என அன்புமணி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china-1000-rains

    சீனாவில் 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த பெருமழை!: தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்..!!

  • girlss_saydi

    சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண் ராணுவத்தினர்!!

  • amesaann11

    அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸின் முதல் விண்வெளி சுற்றுலா பயணம் : மெய்சிலிர்க்க வைக்கும் படங்கள்!!

  • marina-sculptures22

    மெரினாவின் அழகை மெருகூட்டும் பிரம்மாண்ட உலோக சிற்பங்கள்!: சென்னை மாநகராட்சியின் சிறந்த முயற்சி..!!

  • 5starrrr

    5 -ஸ்டார் ஹோட்டல்.. பிரார்த்தனை கூடம், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை : விமான நிலையம் பாணியில் குஜராத் ரயில் நிலையம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்