SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரித்வி ஷாவின் காதலி போட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் வைரல்

2021-07-21@ 16:32:17

இலங்கையுடனான முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் வெற்றிக்கு பிரித்வி ஷா முக்கிய காரணமாக பார்க்கப்பட்டார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 262 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் பிரித்வி ஷா எதிரணி பவுலர்களை திக்கு முக்காட வைத்தார். அவர் காட்டிய அதிரடியில் இது ஒருநாள் போட்டியா அல்லது டி20 போட்டியா என ரசிகர்கள் ட்ரோல் செய்யும் அளவிற்கு சென்று விட்டனர். ஷிகர் தவானை ஸ்ட்ரைக்கிற்கே வரவிடாதவாறு பவுண்டரிகளை விரட்டினார்.

அவர், 24 பந்துகளில் 43 ரன் விளாசினார். இதனால் அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது. பிரித்விக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அவரின் காதலி என்று கூறப்பட்டு வரும் நடிகை ப்ராச்சி சிங், மிகவும் நெருக்கமான வாழ்த்து ஒன்றை கூறியுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பிரித்வி ஷாவின் ஸ்கோர் விவரங்களை பதிவிட்டு, ‘தி பெஸ்ட்’ என குறிப்பிட்டுள்ளார். அதோடு, ஒரு ஹார்ட்டீன் எமோஜியையும் இணைத்துள்ளார். இதுமட்டுமல்லாமல் பிரித்வி ஷா ஆட்ட நாயகன் விருது வாங்கும் புகைப்படத்தை போட்டும் ஹார்ட்டின் எமோஜியை பறக்கவிட்டுள்ளார்.

பிரித்வி ஷாவும் - நடிகை ப்ராத்தி சிங்கும் ரகசியமாக காதலித்து வருவதாக கடந்த ஓராண்டுக்கு மேலாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதற்கேற்றார் போல இருவரும் இன்ஸ்டாகிராம் பதிவுகளை போட்டு வருகின்றனர். எனினும் அவர்கள் தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iceberg-boat-23

  இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

 • thailand-taxi-23

  தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

 • haiti-refugees-21

  ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

 • drone-21

  புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்