SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பூகம்பம்

2021-07-21@ 00:08:03

இந்தியாவில்  ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின், பெகாசஸ் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ராகுல், 2 ஒன்றிய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் என சுமார் 1000 இந்தியர்களின் தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டதாக  பட்டியல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு சில பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இதை ஒன்றிய அரசு மறுத்தது. 2 ஆண்டுக்கு பிறகு தற்போது ஒன்றிய அரசே 2 ஒன்றிய அமைச்சர்கள், உச்சநீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதி, 40 பத்திரிகையாளர்கள், 3 முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 1000  இந்தியர்களின் விவரங்களை இந்த மென்பொருளை பயன்படுத்தி திருடப்பட்டுள்ளதை இந்திய செய்தி நிறுவனம் உறுதிபடுத்தியது.

இந்த பட்டியலில் காங்கிஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி  பயன்படுத்திய 2 செல்போன் எண்கள், ராகுலின் 5 நண்பர்கள் மற்றும் அவருக்கு அறிமுகமானவர்கள், மோடி அமைச்சரவையில் உள்ள ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஒன்றிய நீர்வளத்துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல் பெயரும் பட்டியல் இடம்பெற்றுள்ளது. இந்திய தேர்தல் ஆணையராக இருந்த அசோக் லவாசா, தேர்தல் கண்காணிப்புக்குழு  நிறுவனர் ஜகதீப் சோகர், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக  இருந்த ரஞ்சன் கோகாய் மீது புகார் அளித்த நீதிமன்ற பெண் ஊழியரின் 3 செல்போன்கள் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட11 பேரின் செல்போன்கள், பிரபல தேர்தல் வியூக நிறுவனமான ஐ-பேக் நிறுவனர் பிரசாந்த் கிஷோர், மம்தா பானர்ஜி உறவினரான எம்எல்ஏ அபிஷேக் பானர்ஜி ஆகியோரது செல்போன்களும் ஒட்டுக்கேட்கப்பட்டதாக வெளியான பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அப்படி நடக்கவே இல்லை என்று ஒன்றிய  அரசு மறுத்துள்ளது.

ஆனால் எதிர்க்கட்சிதலைவர்கள், ‘ஒட்டுகேட்பு உண்மை, இது மோடிக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பே இல்லை’ என குற்றம்சாட்டி வருகின்றனர். பெகாசஸ் மென்பொருளை இந்தியாவுக்கு விற்பனை செய்த என்எஸ்ஓ நிறுவனமும் தொலைபேசிகள்  ஒட்டுக் கேட்கப்பட்டதற்கான புகார்களை மறுத்துள்ளது. நாடாளு மன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பெகாசஸ் விவகாரம் மிகப்பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரான்ஸ் அரசும் இதுபற்றிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதே போன்ற ஒட்டுகேட்பு விவகாரம் வாட்டர்கேட் ஊழல் என்ற பெயரில் அமெரிக்காவை ஆட்டிப்படைத்தது. இப்போது இந்தியாவில் ஆட்டம் தொடங்கி இருக்கிறது. அடங்கி விடுமா அல்லது பற்றி எரியுமா என்பது போகப்போகத் தெரியும்.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • inde-12

  நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

 • drugs-11

  போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

 • cuba-fire-accident

  கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

 • south korea

  தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

 • birds-flu-10

  பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்