SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாகிஸ்தானுக்கு எதிரான டி20: 45 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

2021-07-19@ 14:35:12

லீட்ஸ்: இங்கிலாந்து-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தான் வென்ற நிலையில், 2வது போட்டி லீட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து 19.5 ஓவரில் 200 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் பட்லர் 59 ரன் (39 பந்து) அடித்தார்.

பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களே எடுத்தது. இதனால் 45 ரன் வித்தியாசத்தில், இங்கிலாந்து வெற்றி பெற்றது. 16 பந்தில் 36 ரன் அடித்து, பந்துவீச்சிலும் அசத்தி 2 விக்கெட் எடுத்த மொயின்அலி ஆட்டநாயகன் விருது பெற்றார். இரு அணிகளுக்கும் இடையோன கடைசி டி20 போட்டி நாளை நடக்கிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்