SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாட்ஸ்அப் எண்ணிற்கு மிஸ்ட்டு கால் ... Pegasus Spyware மூலம் எப்படி உளவு பார்க்கிறார்கள்?: அதிர்ச்சி தகவல்கள்

2021-07-19@ 11:04:49

டெல்லி :  பெகாசஸ் ஸ்பைவேர் ஈமெயில் அல்லது குறுஞ்செய்தி வழியாக கண்காணிக்கப்பட வேண்டிய நபரின் மொபைலுக்கு அனுப்பப்படும். இந்த குறிப்பிட்ட லிங்கை அவர் அழுத்தியதும் அந்த மொபைல் முழுவதுமாக கண்காணிப்பாளர்கள் கட்டுப்பாட்டிற்குள் சென்று விடும்.வாட்ஸ்அப் எண்ணிற்கு மிஸ்ட்டு கால் கொடுப்பதன் மூலமே அந்த செல்போனில் பெகாசஸ் ஸ்பைவேர் முழுமையாக ஊடுருவி விட முடியும். இவ்வாறு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட மொபைலில் உள்ள ஈமெயில், குறுஞ்செய்திகள், வாட்ஸ்-அப் தகவல் பரிமாற்றம், தொடர்பு எண்கள், பாஸ்வேர்ட், கேலண்டர் அழைப்புகள் என அனைத்தையும் பெற முடியும்.

செல்போனில் ஜிபிஎஸ் வசதி மூலம் அவர் எங்கு இருக்கிறார் என்பதையும் உளவு நிறுவனங்கள் அறிய முடியும்.உளவு நிறுவனத்தினரால் செல்போனில் உள்ள கேமராவை இயக்கி விரும்பிய நேரத்தில் புகைப்படமோ, வீடியோவோ பதிவு செய்ய முடியும். உளவு வலையில் சிக்கியவர்களின் உரையாடலை தொலைவில் இருந்தபடியே பதிவு செய்யவும் முடியும். இதனால் உளவு நிறுவனங்கள் கண்காணிக்க விரும்பும் நபரை தொலைவில் இருந்தபடியே அவர் என்ன செய்து கொண்டு இருக்கிறார் ? எங்கு இருக்கிறார் போன்ற தகவல்களை பெற முடியும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china-1000-rains

    சீனாவில் 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த பெருமழை!: தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்..!!

  • girlss_saydi

    சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண் ராணுவத்தினர்!!

  • amesaann11

    அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸின் முதல் விண்வெளி சுற்றுலா பயணம் : மெய்சிலிர்க்க வைக்கும் படங்கள்!!

  • marina-sculptures22

    மெரினாவின் அழகை மெருகூட்டும் பிரம்மாண்ட உலோக சிற்பங்கள்!: சென்னை மாநகராட்சியின் சிறந்த முயற்சி..!!

  • 5starrrr

    5 -ஸ்டார் ஹோட்டல்.. பிரார்த்தனை கூடம், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை : விமான நிலையம் பாணியில் குஜராத் ரயில் நிலையம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்