SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அந்தரங்கத்தை படம் பிடித்து மிரட்டல் தொழிலதிபர் மீது நடிகை கண்ணீர் புகார

2013-11-23@ 11:02:50

சென்னை:சுந்தரா டிராவல்ஸ், அடாவடி, காத்தவராயன், கேம், மானஸ்தன் உள்பட 10க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ராதா. தெலுங்கு படங்களிலும் நடித்துள் ளார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:ஆந்திர மாநிலம் நெல் லூர் எனது சொந்த ஊர். தாயாருடன் வசிக்கிறேன். இயற்பெயர் பர்வீன். சினிமாவுக்காக ராதா என்று பெயரை மாற்றிக் கொண்டேன். தமிழில் 10க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள் ளேன். தெலுங்கு படத்தி லும் நடித்துள்ளேன். 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி எனக்கு தெரிந்த சினிமா தயாரிப்பாளர் சவுந்தர் ராஜன் என்பவர் திருவல்லிக்கேணி தைபூன் அலிகான் சாலையை சேர்ந்த பைசூல் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார்.பைசூல் சினிமா தயாரிப்பாளர் என்று என்னி டம் அறிமுகம் ஆனார். அவர் தயாரிக்கும் படத்துக்கு என்னை ஒப்பந்தம் செய்தார்.முன் பணமாக  10 ஆயிரம் கொடுத்தார்.

படம் தயாரிப்பது தொடர்பாக என் வீட்டிற்கு அவர் அடிக்கடி வர ஆரம்பித் தார். என்னை நேசிப்பதாக கூறிய அவர், திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதி அளித்தார். அதன் படி, ஆசை வார்த்தை கூறி 2008ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டுவரை என்னுடன் உறவு கொண்டார். கணவன், மனைவி போல் ஒரே வீட்டில் வசித்தோம். நான் கர்ப்பம் ஆனேன். அதை கலைக்க சொன் னார். வைர வியாபாரத் தில் தற்போது நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதில் இருந்து மீண்ட உடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார். அதை நம்பி கர்ப்பம் கலைக்கப்பட்டது.இந்நிலையில் பைசூல் வைர வியாபாரம் செய்வதாக பொய் சொல்லி அதை விரிவு படுத்துவதாக கூறி தன்னி டம் படிப்படியாக  50 லட்சம் பெற்றுள்ளார்.

அவர் சொல்வது பொய் என்று தெரியவந்த உடன் அவரை பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன். அப்போது, பைசலுக்கு ஏற்கனவே, திருமணமாகி அவரது முதல் மனைவி திருமண உறவை முறித்து விட்டு சென்றிருப் பது தெரியவந்தது.இதுகுறித்து, அவரிடம் கேட்டபோது என்னை மிரட்ட ஆரம்பித்தார். திருமணம் செய்து கொள்ளவும் மறுத்து விட்டார். போலீசுக்கு சென்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார். எனவே, தன்னை ஏமாற்றிய பைசூல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, உரிய விசாரணை நடத்த தி.நகர் துணை கமிஷனர் பகலவனுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.புகார் குறித்து நடிகை ராதா கூறியதாவது:பைசூல் தன்னை ஷியாம் என்ற பெயரில் தொடர்பு கொண்டு மோசடி செய்தார்.

 அவருக்கு திருமணம் ஆனது எனக்கு முதலில் தெரியாது. அவரை உண்மையாக நேசித்தேன்.நாங்கள் இருவரும் கணவன், மனைவிபோல் இருந்தபோது, அதை தனது செல்போனில் படம் பிடித்தார். ஏன் அந்தரங்கத்தை செல்போனில் படம் பிடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, நீ இல்லாத நேரத்தில் உன் நினைவாக அதை பார்ப்பதற்காகத் தான் என்று கூறினார். தற்போது, போலீசுக்கு சென்றால் அந்த அந்தரங்க காட்சிகளை இணைய தளத்தில் வெளி யிட்டு அவமானப்படுத்தி விடுவேன் என்று மிரட்டுகிறார். பைசூலை நம்பி திரைப்பட தொழிலை விட்டு விட்டேன். பணத்தையும் இழந்து விட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.

sms spy app click spy apps free
cialis cvs coupon cialis coupon cialis 20mg
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • missii

  வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்