டெல்டா வகை கொரோனா 104 நாடுகளுக்கு பரவிவிட்டதாக WHO தகவல்.. அதிகளவில் பாதிப்பு, உயிரிழப்புகளை ஏற்படுத்துவதாக எச்சரிக்கை!!
2021-07-13@ 15:52:38

ஜெனீவா : இந்தியாவில் உருவான டெல்டா வகை கொரோனா வைரஸ் 104 நாடுகளுக்கு பரவிவிட்டதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் எச்சரித்துள்ளார்.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக பல கோடி மக்களை தாக்கி வரும் நிலையில் பல்வேறு நாடுகளில் கொரோனா வெவ்வேறு வகையில் உருமாற்றம் அடைந்துள்ளது. அவற்றை ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என பெயரிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, உலகளவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களின் இந்தியாவில் உருவான டெல்டா வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது.
இந்த வைரஸ் இதுவரை 104 நாடுகளில் பரவி இருப்பதாக தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதோனம், அண்மை காலமாக உயிரிழப்புகள் அதிகரிக்க இவவகை வைரஸ் தான் காரணம் என கூறியுள்ளார்.விரைவில் உலகம் முழுவதும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸாக டெல்டா வகை கொரோனா இருக்கும் என கனிந்துள்ள அவர், கொரோனா பெருந்தொற்று இன்னும் முடியவில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Tags:
கொரோனா வைரஸ்மேலும் செய்திகள்
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இலங்கை துறைமுகத்துக்கு வந்தது சீன உளவு கப்பல்: 22ம் தேதி வரை முகாமிடும் என அறிவிப்பு
7 தைவான் அதிகாரிகளுக்கு சீனா பொருளாதார தடை
இந்தியாவின் சுதந்திர தினம்; நியூயார்க்கில் ஆடல், பாடலுடன் கொண்டாட்டம்
நில மோசடி வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறை..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ.. வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒடிங்கா நூலிழையில் தோல்வி..!!
சீனாவின் உளவுக் கப்பலான ‘யுவான் வாங்-5’ இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்தடைந்தது
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!