தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கோவை, நீலகிரியில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
2021-07-13@ 13:38:11

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 'தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை நீலகிரி ,கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல் தென்காசி மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, ஈரோடு ,தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும். வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை ,காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய கூடும். ஏனைய மாவட்டங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
15ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி ,சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
16ம் தேதி நீலகிரி ,கோயம்புத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்,
17ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
இன்று முதல் வருகின்ற 17ம் தேதி வரை மேற்கு வங்க கடல், மத்திய மேற்கு வங்க கடல் ,கேரளா, கர்நாடகா கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் ,தென்மேற்கு அரபிக்கடல், மத்திய அரபிக்கடல் மற்றும் வடக்கு அரபிக் கடல் பகுதிகளில் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் இந்தப் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்,' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:
வானிலை ஆய்வு மையம்மேலும் செய்திகள்
தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம்: அமைச்சர், எம்பி பங்கேற்பு
கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி ஒரு கிலோ ரூ.110: மற்ற காய்கறிகள் விலையும் எகிறியது
சுகாதாரத்துறை ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தஞ்சாவூரில் கோயில் குளத்தை தூர்வாரிய போது: சோழர் காலத்து 7 உறை கிணறு கண்டுபிடிப்பு
உயர்த்தியதில் இருந்து 50% குறைத்துவிட்டு மாநிலங்களை குறைக்கச் சொல்வதா?.. ஒன்றிய அரசுக்கு தமிழக நிதியமைச்சர் கேள்வி
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்