அரசுக்கு தானமாக வழங்கிய 100 கோடி நிலம் அதிமுக முன்னாள் மா.செ. மோசடி: கலெக்டரிடம் பரபரப்பு புகார்
2021-07-13@ 00:25:27

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி ஒன்றியம் கொளப்பாக்கத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருக்கு சொந்தமான 85 சென்ட் நிலத்தை, சாலை பணிக்காக அரசுக்கு தானமாக கொடுத்தார். மேலும், இதுதொடர்பாக, படப்பை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தானமாக பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். ஆனால், அரசுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தை, கடந்த 2007ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த ஈ.வி.பி.பெருமாள்சாமி என்பவர், அரசு அதிகாரிகள் உதவியுடன் பட்டா மாற்றம் செய்து கொண்டார். மேலும் தற்போது 100 கோடி மதிப்புள்ள இடத்தில் ஈ.வி.பி.பெருமாள்சாமி, திருமண மண்டபம் கட்டி தொழில் நடத்தி வருகிறார்.
இதுகுறித்து நிலத்தை தானம் வழங்கிய ராமகிருஷ்ணனின் மகன் பழனி, பலமுறை அரசு அதிகாரிகளிள், மாவட்ட நிர்வாகத்திம் என பலமுறை புகார் தெரிவித்தார். ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்நிையில், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், இந்த நில மோசடி விவகாரம் குறித்து ராமகிருஷ்ணன் மகன் பழனி, தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிபில் புகர் அளித்துள்ளார். அதில், அரசு பணிக்காக ஊராட்சி ஒன்றியத்துக்கு தானம் அளித்த நிலத்தை, அரசு அலுவலர்கள் உதவியுடன் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் ஈ.வி.பி.பெருமாள் சாமி, பட்டா பெற்று மோசடி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுதொடர்பாக, காஞ்சிபுரம் கலெக்டரிடம், உரிமையாளர் மகன் பழனி, தனது தந்தை அரசுக்கு தானம் கொடுத்த இடத்தை முறைகேடு செய்து அனுபவித்து வரும் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பெருமாள்சாமி மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அவரது திருமண மண்டபத்தை அரசு பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும். தன்னை ஆள் வைத்து மிரட்டும் பெருமாள் சாமி மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று கோரிக்கை மனு அளித்தார். முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளர் மீது, 1100 கோடி நில மோசடி புகார் அளிக்கப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
12 ஆண்டுகளுக்கு பின் மதுரை-தேனி ரயில் சேவை நாளை மறுநாள் தொடக்கம்: பிரதமர் மோடி காணொலி மூலம் துவக்கி வைக்கிறார்
குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கல்லூரி மாணவி கொலை: 2 இடங்களில் சாலை மறியல்
தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் பாலியஸ்டர் நூல் உற்பத்திக்கு மாற கழிவு பஞ்சு நூல் உற்பத்தியாளர் முடிவு
விருதுநகர் இளம்பெண் கூட்டு பலாத்கார வழக்கு 7 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
கலால் வரியை குறைத்து பித்தலாட்டத்தை ஒன்றிய அரசு செய்திருக்கிறது: டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி குற்றச்சாட்டு
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் துவக்க விழா ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வளித்தவர் கலைஞர்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை