விம்பிள்டன் மகளிர் பைனலில் ஆஷ்லி-கரோலினா இன்று மோதல்
2021-07-10@ 00:17:28

லண்டன்: விம்பிள்டன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற உள்ள மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் ஆஸி.யின் ஆஷ்லி பார்தி, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா மோத உள்ளனர். முதல் அரையிறுதியில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பருடன் (25வது ரேங்க்) மோதிய நம்பர் 1 வீராங்கனை பார்தி 6-3, 7-6 (7-3) என நேர் செட்களில் வென்றார். 2வது அரையிறுதியில் பிளிஸ்கோவா (13வது ரேங்க்) 5-7, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் பெலராஸ் வீராங்கனை அரினா சபலெங்காவை (4வது ரேங்க்) வீழ்த்தினார். இன்று மாலை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பார்தி - பிளிஸ்கோவா மோதுகின்றனர். இருவரும் முதல் முறையாக விம்பிள்டன் பைனலுக்கு முன்னேறியுள்ளனர். விம்பிள்டனில் புதிய சாம்பியனாக இருவரும் வரிந்துகட்டுவதால், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி. பார்தி - பிளிஸ்கோவா 7 முறை மோதியுள்ளதில் பார்தி 5 - 2 என முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
பாரா டிடியில் 2 பதக்கம்
மகளிர் ஈட்டி எறிதலில் அன்னு ராணி அசத்தல்
மும்முறை தாண்டுதலில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி
காமன்வெல்த் பாக்சிங்கில் இந்தியாவுக்கு 3 தங்கம்: நீத்து, பாங்கல், நிக்கத் அசத்தல்
மகளிர் பேட்மின்டன்; பைனலில் சிந்து.! லக்ஷியாவும் முன்னேற்றம்
சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் துணை தலைவராக ஆனந்த் தேர்வு
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!