SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு வேலை வாங்கி தருவதாக 150 பேரிடம் 5 கோடி மோசடி: தம்பதி உட்பட 3 பேர் கைது

2021-07-10@ 00:05:42

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொட்டிவாக்கம் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த ஆனந்தி(35) அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: வளசரவாக்கம் காமராஜர் சாலையை சேர்ந்த நந்தினி(36) மற்றும் அவரது கணவர் அருண் சாய்ஜி(36) மற்றும் திருவான்மியூர் டாக்டர் வாசுதேவன் நகர் விரிவு பகுதியை சேர்ந்த ரேஷ்மா தாவூத்(35) ஆகியோர் எனக்கு பழக்கமாகினர். அப்போது அவர்கள், தமிழக அரசு துறைகளில் உதவி பொறியாளர், மக்கள் தொடர்பு துறையில் உதவி அதிகாரி மற்றும் சத்துணவு அமைப்பாளர் ஆகிய பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்து பயிற்சி அளிப்பதாக கூறினார். அதை நம்பி எனக்கு தெரிந்த நபர்கள் என 85 பேருக்கு வேலை வாங்கி தரக்கோரி ₹4.15 கோடி வசூலித்து கொடுத்தேன். ஆனால் சொன்னப்படி 3 பேரும் யாருக்கும் அரசு வேலை வாங்கி தரவில்லை. எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.

அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், நந்தினி அவரது கணவர் அருண் சாய்ஜி ஆகியோர் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கடந்த 30ம் தேதி கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். பின்னர் போலீசார் தம்பதி உட்பட 3 பேரையும் நீதிமன்ற உத்தரவுப்படி காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. கைது செய்யப்பட்ட 3 பேரும், தமிழக அரசின் அச்சு மற்றும் எழுதுபொருள் துறையில் உதவி பொது மேலாளர், தமிழ்நாடு மின் சார வாரியத்தில் உதவி பொறியாளர், மக்கள் தொடர்பு துறையில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி, சத்துணவு அமைப்பாளர் ஆகிய பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்து போலியாக அனைவருக்கும் பயிற்சி அளித்து மோசடி செய்தது தெரியவந்தது. இதுவரை 150 பேருக்கு போலியாக பயிற்சி அளித்து அவர்களுக்கு போலியான பணி நியமன ஆணைகள் கொடுத்து அதன் மூலம் 5 கோடி வசூலித்து மோசடி செய்தது தெரியவந்தது.

இதற்காக தனியாக ஒரு பயிற்சி மையம் மற்றும் அலுவலகம் நடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு 3 பேர் அளித்த தகவலின்படி வீடு மற்றும் அலுவலகங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அதில், 100க்கும் மேற்பட்ட போலி பணி நியமன ஆணைகள், துறை ரீதியான அரசு முத்திரைகள், மோசடிக்கு பயன்படுத்திய கணினி உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் சிக்கியது. மோசடி பணத்தில் வாங்கிய சொகுசு கார் ஒன்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

 • london-vertical-farm-29

  நிலத்தில் இருந்து 100 அடிக்குக் கீழே விவசாயம்!: லண்டனில் பிரபலமாகி வரும் "வெர்டிக்கல் ஃபார்மிங்"

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்