SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்: சிலிண்டரை மாட்டு வண்டியில் ஏற்றி ஊர்வலம்

2021-07-09@ 01:26:37

பூந்தமல்லி: பெட்ரோல், டீசல் மற்றும் காஸ்  விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து விலை உயர்வுக்கு காரணமான ஒன்றிய பா.ஜ அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் திருவள்ளுர் தெற்கு மாவட்ட தலைவர் லயன் டி.ரமேஷ் தலைமையில், முன்னாள் எம்எல்ஏ அருள் அன்பரசு, மாநில துணை தலைவர் இமயா கக்கன், மாநில விவசாய பிரிவு தலைவர் பவுன் குமார், மாவட்ட நிர்வாகிகள் தாயுமானவன், எட்வின் காமராஜ், நகர தலைவர் இமயவரம்பன் முன்னிலையில் பூந்தமல்லியில் பெட்ரோல் பங்க் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு முன்னதாக,  காங்கிரஸ் கட்சியினர் வாகனங்களுக்கு மாலை அணிவித்து சாலையில் ஊர்வலமாக தள்ளிக்கொண்டு வந்ததனர் அதனை தொடர்ந்து சிலிண்டரை மாட்டு வண்டியின் மீது ஏற்றி மாலை அணிவித்து நூதன முறையில்  போராட்டம் நடத்தினர்.

பொன்னேரி:பொன்னேரியில் உள்ள தடபெரும்பக்கம்...  பெட்ரோல் பங்க் அருகே பெட்ரோல் விலை உயர்வை கட்டுபடுத்த  தவறிய ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மாநில துணை தலைவர் சதாசிவலிங்கம் தலைமையில் அக்கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் எரிபொருள் விலையை குறைக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை எம்எல்ஏ துரை சந்திரசேகர் தொடங்கி வைத்தார். கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டியில் 3 பெட்ரோல் பங்குகள்  முன்பு காங்கிரஸ் கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில், கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் பெட்ரோல் பங்க் முன்பு காங்கிரஸ்  கட்சி மாநில செயலாளர் வழக்கறிஞர் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதே  போல, கும்மிடிப்பூண்டியில் கன்னியம்மன் கோயில் கேட் பகுதியில் பெட்ரோல்  பங்க் முன் காங்கிரஸ் நிர்வாகியும் ஒன்றிய கவுன்சிலருமான ஏ.மதன்மோகன்  தலைமையிலும். இதனை தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி பஜாரில் பெட்ரோல் பங்க்  முன் வட்டார காங்கிரஸ் தலைவர் குணசேகரன், பரசுராமன் ஆகியோர் தலைமையிலும்,  மாதர்பாக்கத்தில் வட்டார தலைவர் எஸ்.எஸ்.பெரியசாமி தலைமையிலும் காங்கிரஸ்  கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  எரிபொருள் விலை உயர்வை  கண்டித்து பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

திருவள்ளூர்: திருவள்ளூரில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் தளபதி மூர்த்தி, எம்.சி.பிரபாகரன் ஜெ.டி.அருள்மொழி, சரஸ்வதி, வழக்கறிஞர் வி.இ.ஜான், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் ஏகாட்டூர் ஆனந்தன், ஜெ.கே.வெங்கடேசன், மாவட்ட நிர்வாகிகள் டி.வடிவேல், வழக்கறிஞர் டி.எஸ்.இளங்கோவன், ஏ.பொன்ராஜ், கே.டி.பிரகாஷ், வி.எம்.தாஸ், செல்வகுமார், வி.எஸ்.ரகுராமன், சீனிவாசராகவன், எஸ்.எஸ்.சரவணன், களில், மணிமாறன், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • planet Vaikundam

  ஜொலிக்கும் பூலோக வைகுண்டம்

 • 04-12-2021

  04-12-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • lunch-ofz

  லஞ்ச் டைம் ஆச்சா...இதோ வந்துட்டோம்: வேலை சுமையில் ஓடுபவர்களுக்கு அலுவலகத்திற்கு சென்று சாப்பாடு கொடுத்து அசத்தும் ஒரே குடும்பத்தினர்..!!

 • Ministers

  மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்

 • Ohmicron_Rajiv Gandhi_Bed

  ஓமைக்ரான் எதிரொலி; வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தயார் நிலையில் 150 படுக்கைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்