அதிமுக ஆட்சி இழந்ததற்கு பாஜக, பாமக கூட்டணி காரணம்: சி.வி.சண்முகம் மீண்டும் குற்றச்சாட்டு
2021-07-09@ 00:23:46

திண்டிவனம்: ‘அதிமுக ஆட்சியை இழந்ததற்கு பாஜக, பாமகவுடன் கூட்டணி வைத்ததுதான் காரணம்’ என்று சி.வி.சண்முகம் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குருவம்மாபேட்டையில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்து செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:- நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைய நாம் எடுத்த சில முடிவுகள் காரணம். அதற்கு கூட்டணியை குறிப்பாக சொல்ல வேண்டும். ஏனென்றால் இன்றைக்கு நாம் ஆட்சிக்கட்டிலில் இருந்திருப்போம். வெற்றிகரமாக மூன்றாவது முறையாக வெற்றி பெற்று இருக்கலாம். தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் பாரதிய ஜனதா கட்சியினருடன் கூட்டணி. இதனால் முழுமையாக சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கவில்லை.
சிறுபான்மையினருக்கு நம் கட்சியின் மீதும் எந்த கோபமோ, வருத்தமோ இல்லை. அவர்கள் கொள்கை ரீதியாக பாஜகவுடன் முரண்பட்டு இருந்தார்கள். நாம் அவர்களோடு வைத்த கூட்டணி காரணத்தால் மிகப் பெரிய தோல்வியை சந்திக்க நேரிட்டது. உதாரணம் நான் போட்டியிட்ட விழுப்புரம் தொகுதி, நான் விழுப்புரத்தில் 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறேன். விழுப்புரத்தில் சிறுபான்மையினரின் வாக்குகள் 20,000 இருக்கிறது. இந்த 20 ஆயிரம் வாக்குகளில் 18 ஆயிரம் வாக்குகள் விழுப்புரம் நகரத்திலேயே உள்ளது. அந்த விழுப்புரம் நகரத்தில் எனக்கு குறைந்தது 16 ஆயிரம் வாக்குகள். சிறுபான்மையினர் வாக்குகள் எனக்கு 300 வாக்குகள் கூட கிடைக்கவில்லை. இந்த நிலைதான் தமிழகம் முழுவதும் இருந்தது. பாட்டாளி மக்கள் கட்சியோடு கூட்டணி வைத்த காரணத்தால் நாம் தாழ்த்தப்பட்டவர்களின் வாக்குகளை பெற முடியவில்லை.
அது அவர்களின் கொள்கை ரீதியான ஒரு முரண்பாடு. நாம் தோல்வி அடைய பாஜக, பாமகவுடன் கூட்டணி சேர்ந்ததுதான் காரணம்.இவ்வாறு சி.வி.சண்முகம் பேசினார். நேற்று முன்தினம் பாஜகவை குற்றம்சாற்றி சி.வி.சண்முகம் பேசியதற்கு பா.ஜ.க.வினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், ‘சி.வி.சண்முகம் பேச்சு, அவரது சொந்த கருத்து. அதிமுக-பாஜ கூட்டணி தொடரும் என்று கூட்டறிக்கை வெளியிட்டனர். இந்த சூழலில், தோல்விக்கு பாஜக-பா.ம.கவுடன் கூட்டணிதான் காரணம் என அவர் பேசியிருப்பது கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:
AIADMK regime for losing BJP BJP alliance CV Shanmugam accused அதிமுக ஆட்சி இழந்ததற்கு பாஜக பாமக கூட்டணி சி.வி.சண்முகம் குற்றச்சாட்டுமேலும் செய்திகள்
சொல்லிட்டாங்க...
ஆஷாக்களுக்கு கிடைத்த விருதால் இந்தியாவிற்கு பெருமை: ஜி.கே.வாசன் அறிக்கை
பெட்ரோல், டீசல் விலை இனி உயராது என்ற உறுதிமொழியே உண்மையான தீர்வை தரும்: ஒன்றிய அரசு நாடகமாடுவதாக கமல்ஹாசன் குற்றச்சாட்டு
குடிநீர் வாரிய ஓய்வூதியதாரர்களுக்கு 14 சதவீத அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து தமிழகத்தில் 26, 27ம் தேதி ஆர்ப்பாட்டம்: இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக கூட்டாக அறிவிப்பு
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கலால் வரியை ஏற்றியது ரூ.26.77 குறைத்தது ரூ.14.50: ஒன்றிய அரசு மீது கே.எஸ்.அழகிரி தாக்கு
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை