ஆக்சிஜன் தயாரிப்பு நீட்டிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் மனு
2021-07-08@ 01:27:44

புதுடெல்லி: கொரோனா 2வது ஆலையின் ஆரம்பத்தில் நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியது. அப்போது, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கினால் ஆக்சிஜனை உற்பத்தி செய்து இலவசமாக தருவதாக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த இடைக்கால வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க அனுமதிப்பதாகவும், உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் முழுவதையும் ஒன்றிய அரசிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது. இந்த அனுமதி இம்மாதம் 31ம் தேதியுடன் முடிகிறது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் நேற்று புதிய இடைக்கால மனுவை தாக்கல் செய்தது. அதில், ‘மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்க வழங்கப்பட்ட முந்தைய அனுமதியை மேலும் 6 மாதம் நீட்டித்து வழங்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. இந்த மனு ஓரிரு நாளில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
டிக்கெட் கட்டணத்தை விமான நிறுவனங்களே நிர்ணயிக்கலாம்: ஒன்றிய அரசு அறிவிப்பால் பயணிகள் கவலை
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கொச்சி-தனுஷ்கோடி சாலையில் போக்குவரத்திற்கு அனுமதி
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல்; பொது போக்குவரத்து வாகனங்களை மட்டும் பயன்படுத்துங்கள்: அரசு, சொந்த வாகனங்களை தவிர்க்க டெல்லி போக்குவரத்து துறை உத்தரவு
தேசிய கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருள் கொடுக்க கூடாது என உத்தரவிடவில்லை: ஒன்றிய அரசு விளக்கம்
விவசாயிகள் உதவித் தொகை பெற ஆதார் எண் பதிவு செய்ய வேண்டும்: ஒன்றிய அரசு உத்தரவு
இந்தியாவில் Fastag பயன்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 35 கோடி லிட்டர் எரிபொருள் சேமிக்கப்படும்: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!