பிரதமர் மோடியுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சந்திப்பு.. ஒன்றிய அமைச்சராகிறாரா?.. புதிய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமில்லை!!
2021-07-07@ 14:23:24

புதுடெல்லி: ஒன்றிய அமைச்சரவையில் எல்.முருகனுக்கு இணையமைச்சர் பதவி அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு 2வது முறையாக பதவியேற்றப் பிறகு முதல் முறையாக, இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு ஒன்றிய அமைச்சர்கள் இன்று மாலை பதவியேற்கின்றனர்.அடுத்த ஆண்டு உபி உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நடக்க உள்ளதை ஒட்டியும், அரசு நிர்வாகத்திறனை மேம்படுத்தும் வகையிலும், ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அதன்படி இன்று மாலை புதிய அமைச்சரவையில் 43 ஒன்றிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். புதிதாக பதவி ஏற்க உள்ள அமைச்சர்களில் 12 பேர் பட்டியல் வகுப்பினர், 8 பேர் பழங்குடியினர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் சார்பில் ஒருவருக்கு அமைச்சரவையில் இடம் வழங்க பிரதமர் மோடி முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒன்றிய அமைச்சர்களாக புதிதாக பதவி ஏற்க உள்ளவர்கள் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த நிலையில், தமிழக பாஜக தலைவர் எல். முருகனும் மோடியை சந்தித்துள்ளார். இதனால் புதிய அமைச்சரவையில் எல். முருகனுக்கு இணையமைச்சர் பதவி அளிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக ஏற்கனவே எல்.முருகன் பதவி வகித்துள்ளார். இதனிடையே அதிமுக சார்பில் தம்பிதுரை , ரவீந்திரநாத், பாமகவின் அன்புமணி, தமாகாவின் ஜி.கே.வாசன் ஆகியோருக்கு புதிய அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கவில்லை.
Tags:
பிரதமர் மோடிமேலும் செய்திகள்
சொத்துக்காக தொழிலதிபரை கடத்திய வழக்கு போலீஸ் உதவி கமிஷனருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு
விஐடி குழும இன்டர்நேஷனல் பள்ளி திறப்பு விழா: தாய்மொழியில் பேசுவதை ஊக்குவிக்க வேண்டும்: துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பேச்சு
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்குக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
தகுதி தேர்வு எழுதி காத்திருப்பவர்களை கொண்டு ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அண்ணாமலை கோரிக்கை
தற்காலிக ஆசிரியர் பணி நியமன முறையை கைவிட வேண்டும்: விஜயகாந்த் அறிக்கை
ஓடிடியில் வெளியாகிறது விக்ரம்
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;