அதிமுக அரசால் கொண்டு வந்த திட்டங்களை திமுக கொண்டுவந்தது போல் அமைச்சர் பேசுவது ஏற்புடையதல்ல: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
2021-07-07@ 01:04:51

சென்னை: சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் தொழில் துவங்க முன்வரும் வெளிநாடு வாழ் தமிழ் மக்களுக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்கவும், ”யாதும் ஊரே\” என்ற புதிய திட்டத்தை கடந்த சட்டப்பேரவையில் அறிவித்து, நேரடியாக சென்று அமெரிக்காவில் துவக்கி வைத்தேன். இதுதவிர, கொரோனா ஊரடங்கு காலத்தில் 2020ல் மே மாதம் முதலே தொழில் துறையின் வளர்ச்சிக்காக தொழில் துறை செயலாளர் தலைமையில் உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு தொழில் முனைவோரை அழைத்து நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினேன்.
இதன் பயனாக, 2020-21 நடப்பு ஆண்டில் மட்டும் ரூ.60,674 கோடி முதலீட்டில் சுமார் 1,00,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. அதிமுக அரசு எடுத்த முயற்சியால் ஓலா நிறுவனம் ஏற்கனவே பணிகளை துவங்கி, தற்போது முடிவடையும் நிலையில் உள்ள ஒரு திட்டத்தை, ஏதோ இந்த ஒன்றரை மாத காலத்தில் கொண்டு வந்தது போல் அமைச்சர் தங்கம் தென்னரசு சொல்வது வியப்பாக உள்ளது. அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களை முடக்காமலும், மக்கள் நலனுக்காக புதிய திட்டங்களை கொண்டுவந்து, தொழில் துறையில் நாங்கள் ஏற்படுத்தி கொடுத்த அடித்தளத்தை செம்மையாக பயன்படுத்தி தமிழ்நாட்டை தொழில் துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்க தொடர்ந்து செயலாற்றுங்கள்.
Tags:
AIADMK government plans DMK Minister talking is not appropriate Edappadi Palanisamy statement அதிமுக அரசால் திட்டங்களை திமுக அமைச்சர் பேசுவது ஏற்புடையதல்ல எடப்பாடி பழனிசாமி அறிக்கைமேலும் செய்திகள்
ராஜிவ் காந்திக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் அளவுக்கு சீமான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை: கே.எஸ்.அழகிரி தாக்கு
சென்னையில் வரும் 28ம் தேதி சிறப்பு பொதுக்குழு பாமக தலைவராக அன்புமணி தேர்வாகிறார்? ஜி.கே.மணிக்கு வேறு பதவி வழங்க திட்டம்
31 வது நினைவு நாள் ராஜிவ்காந்தி நினைவிடத்தில் காங். கட்சியினர் மலர் அஞ்சலி
சொல்லிட்டாங்க...
மடியில் கனம் இருப்பதால் எதிர்க்கட்சியாக செயல்பட அதிமுக தவறிவிட்டது: டிடிவி தினகரன் பேட்டி
பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை குறித்து சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்