சஸ்பெண்ட் செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ள 6 செயல் அலுவலர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும்: ஆணையர் குமரகுருபரனுக்கு கோயில் நிர்வாக அதிகாரிகள் மனு
2021-07-05@ 00:57:11

சென்னை: பல ஆண்டுகளாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ள 6 செயல் அலுவலர்களுக்கு மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்று கோயில் நிர்வாக அதிகாரி சங்கம் சார்பில் ஆணையர் குமரகுருபரனுக்கு மனு அளித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்க தலைவர் அருட்செல்வன் ஆணையர் குமரகுருபரனுக்கு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தற்காலி பணி நீக்கம் செய்து செயல் அலுவலர் காமராஜ் 4 ஆண்டுகளாகவும், செயல் அலுவலர்கள் ஜெயச்சந்திரன், சசிகலா, ஆனந்தகுமார் 2 ஆண்டுகளாகவும், செயல் அலுவலர்கள் மணி, சரவணன் ஆகியோர் 6 மாதங்களுக்கு மேலாக உள்ளனர். செயல் அலுவலர்கள் பல்வேறு காரணங்களுக்காக தற்காலிக பணி நீக்கம் ெசய்யப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும் விசாரணை முடிக்கப்படாமலும், மீண்டும் பணி வழங்காமலும் இருந்து வருகின்றனர்.
இவர்களை பணியமர்த்த கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்கம் முந்தைய ஆணையரிடம் மனு அளித்தது. ஆனாலும், இதுவரை அவர்கள் மீண்டும் பணியமர்த்தப்படவில்லை. பல ஆண்டுகளாக தற்காலிக பணி நீக்கத்தில் உள்ள செயல் அலுவலர்கள் மிகவும் வேதனையுடன் உள்ளனர். அவர்களது குடும்பம் குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட அடிப்படை வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. 6 மாதங்களுக்குள் விசாரணை முடிக்கப்படாமலும் தொடர்ந்து தற்காலிக பணி நீக்கத்திற்கு கால நீட்டிப்பு குறித்து உத்தரவுகள் பிறப்பிக்கப்படாமலும் ஓரிரு செயல் அலுவலர்கள் விசாணை முடிவடைந்தும் ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்ந்து நிலுவையில் உள்ளது.
எனவே ஆணையர், செயல் அலுவலர்களின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்து விசாரணை நிலுவையில் வைத்து மீண்டும் பணி வழங்க உத்தரவிடுமாறு கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
செஸ் ஒலிம்பியாட் போன்று உலகளாவிய போட்டிகளை தமிழகத்தில் நடத்த வாய்ப்பு அளியுங்கள்: பாராட்டிய பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை..!!
திமுக அரசு பொறுப்பேற்றது முதல் ஜூன் மாதம் வரை ரூ.9.19 கோடி மதிப்பு 152 டன் போதைப் பொருட்கள் பறிமுதல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
மாநில தத்து வள ஆதார மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் திட்ட அலுவலர் பணி: விண்ணப்பிக்க 26ம்தேதி கடைசி நாள்
பொறியியல் முடித்த மாணவர்களுக்கு சென்னை ஐஐடியில் 6 மாத தொழில்நுட்ப திறன் பயிற்சி
தனியார் துறை சார்பில் சென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
சென்னை பாஜ தலைமை அலுவலகத்தில் காஷ்மீரில் தயாரான தேசியக்கொடி ஏற்றப்படும்: கே.அண்ணாமலை தகவல்
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!