விசாகப்பட்டினம் கடற்படை தளத்தை சுற்றி 3 கி. மீட்டர் தூரத்துக்கு டிரோன்கள் பறக்க தடை
2021-07-04@ 00:58:48

விசாகப்பட்டினம்: ஜம்முவில் விமானப்படை தளத்தின் மீது கடந்த ஞாயிறன்று தீவிரவாதிகள், டிரோன்கள் மூலம் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, தொடர்ந்து மூன்று நாட்களாக ஜம்மு காஷ்மீரில் டிரோன்கள் அடிக்கடி வந்து பீதியை கிளப்பி வருகின்றன. பாதுகாப்பு படைகள் அவற்றை விரட்டி வருகின்றன. மேலும், டிரோன்கள் மூலமாக நாட்டின் முக்கிய ராணுவ தளங்களின் மீது தாக்குதல் நடத்தக் கூடும் என உளவுத்துறைகள் எச்சரிக்கை விடுத்ததால், இந்த இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் கிழக்கு கடற்படையின் தலைமை தளம் அமைந்துள்ளது. கடற்படையின் முக்கிய போர்க்கப்பல்கள் இங்கு முகாமிட்டுள்ளன. இதனால், இந்த தளத்தை சுற்றி 3 கிமீ தூரத்துக்கு டிரோன்கள் பறப்பதற்கு நேற்று தடை விதிக்கப்பட்டது. மீறி பறக்க விடப்படும் டிரோன்கள் மீது சுட்டு வீழ்த்தப்படும் என்றும், அதை ஏவியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
புதுச்சேரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு உணவு மற்றும் ஒயின் திருவிழா: மதுபிரியர்கள் குதூகலம்..!!
நாட்டிற்கு எதிரான போலி செய்திகளை வெளியிட்டதாக 8 யூடியூப் சேனல்களை முடக்கியது ஒன்றிய அரசு..!!
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் லாலு பிரசாத் யாதவுடன் சந்திப்பு: உடல் நலம் விசாரித்தார்
மற்ற பெண்களுடன் மனைவியை ஒப்பிடுவது கொடுமை: கேரள உயர் நீதிமன்றம் கருத்து
கேரளாவில் விழிஞ்சம் துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 வது நாளாக மீனவர்கள் போராட்டம்...
கல்வி, கலாச்சாரப் பயணமாக புதுவை வந்துள்ள துருக்கி மாணவர்கள்!: சுடு களிமண் பொம்மை செய்யும் முறை குறித்து பயிற்சி..!!
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...