SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யூரோ கோப்பை கால்பந்து; அரையிறுதியில் ஸ்பெயின், இத்தாலி: பெல்ஜியம், சுவிட்சர்லாந்து வெளியேற்றம்

2021-07-03@ 17:38:34

செயின்ட்பீட்டர்ஸ்பர்க்: ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் ஷிப் (யூரோ) தொடரில் ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் நேற்று நடந்த முதலாவது கால் இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் - சுவிட்சர்லாந்து மோதின. தொடக்கம் முதலே ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியது. 8வது நிமிடத்தில், கார்னரில் இருந்து வந்த பந்தை ஸ்பெயின் வீரர் ஜார்டி ஆல்பா கோல் வலையை நோக்கி அடித்தார். ஆனால் சுவிட்சர்லாந்து நடுகள வீரர் டெனிஸ் ஜகாரியா காலில் பட்டு கோல் வலைக்குள் புகுந்து சுய கோலானது.

இதனால் ஸ்பெயின் 1-0 என முதல் பாதியில் முன்னிலை பெற்றது. பதில் கோல் அடிக்க சுவிட்சர்லாந்து வீரர்கள் போராடினர். 68வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் மெஸ்ஸி என்று அழைக்கப்படும் கேப்டன் செட்ரான் ஷகீரி கோலை அடித்து சமநிலை ஏற்படுத்தினார். 77வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரரின் காலில் மிதித்த சுவிட்சர்லாந்து வீரர் ரெமோ புருலெர் சிவப்பு அட்டை காண்பித்து வெளியேற்றப்பட்டதால் 10 வீரர்களுடன் ஆடியது.

ஸ்பெயினின் தாக்குதல் ஆட்டத்தில் சுமார் 12 கோல் முயற்சிகளை சுவிட்சர்லாந்து கோல் கீப்பர் சோமர் தடுத்தார். 90 நிமிடம் முடிந்த நிலையில் ஆட்டத்தில் முடிவு ஏற்படாததால் கூடுதலாக 30 நிமிடம் ஒதுக்கப்பட்டது.  கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில், ஸ்பெயின் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

ஜெர்மனி தலைநகர் மியூனிக்கில், இன்று அதிகாலை 12.30 மணிக்கு நடந்த மற்றொரு கால் இறுதி போட்டியில் நம்பர் 1 அணியான பெல்ஜியத்துடன், 7வது இடத்தில் உள்ள இத்தாலி பலப்பரீட்சை நடத்தியது. நாக்அவுட் சுற்றில் நடப்பு சாம்பியன் போர்ச்சுகலை வெளியேற்றிய உற்சாகத்தில் பெல்ஜியம் களம் இறங்கியது. பரபரப்புடன் தொடங்கிய இந்த ஆட்டத்தில் 31வது நிமிடத்தில் இத்தாலியின் நிக்கோலோ பரேல்லா கோல் அடித்து முன்னிலை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து 44வது நிமிடத்தில் லோரென்சோ இன்சைன் கோல் அடிக்க 2-0 என இத்தாலி முன்னிலை பெற்றது. இதற்கு பதிலடியாக 47வது நிமிடத்தில், பெல்ஜியம் வீரர் ரொமேலு லுகாகு கோல் அடித்தார். பின்னர் இருஅணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. பெல்ஜியம் கடுமையாக போராடியும் பலன் கிடைக்கவில்லை. இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அரையிறுதியில் இத்தாலி-ஸ்பெயின் அணிகள், வரும் 7ம்தேதி மோதுகின்றன.

அரையிறுதிக்கு தகுதி பெறுமா இங்கிலாந்து?
யூரோ கோப்பை தொடரில் அஜர்பைஜானின் பாகு நகரில் இன்று இரவு 9.30 மணிக்கு  நடக்கும் கால் இறுதி போட்டியில், செக்குடியரசு-டென்மார்க் மோதுகின்றன. இரு அணிகளும் இதற்கு முன் மோதிய 11 போட்டியில் 3ல் செக் குடியரசும், டென்மார்க் 2 போட்டிகளிலும் வென்றுள்ளன. 6 போட்டி சமனில் முடிந்துள்ளது. இத்தாலியின் ரோம் நகரில் இரவு 12.30 மணிக்கு நடக்கும் 4வது கால் இறுதி போட்டியில் இங்கிலாந்து-உக்ரைன்  பலப்பரீட்சை நடத்துகின்றன.

வலுவான இங்கிலாந்து நடப்பு தொடரில் ஒரு தோல்வியை கூட சந்திக்கவில்லை. உக்ரைனுக்கு எதிராக இதுவரை 7 போட்டிகளில் ஆடி உள்ள இங்கிலாந்து 4ல் வென்றுள்ளது. உக்ரைன் ஒன்றில் மட்டுமே வெற்றி வாகை சூடி இருக்கிறது. 2 போட்டி சமனில் முடிந்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • turkey-babys-9

  துருக்கி நிலநடுக்கத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த குழந்தைகளின் புகைப்படங்கள்..!!

 • peru-bird-kills

  பறவை காய்ச்சலால் 585 கடல் சிங்கம், 55,000 பறவைகள் பலி: பெரு நாட்டில் சோகம்..!

 • nivaraaa1

  மீட்பு, நிவாரண பணிகளில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்!!

 • vadakoriya

  வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு

 • erode-senthilbalaji-8

  சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்