யூரோ கோப்பை கால்பந்து காலிறுதியில் ஸ்பெயின், சுவிஸ்
2021-06-30@ 00:06:11

கோபென்ஹேகன்: யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நாக்அவுட் சுற்றில் ஸ்பெயின், சுவிட்சர்லாந்து அணிகள் போராடி வென்று காலிறுதிக்கு முன்னேறின. கோபென்ஹேகன் நகரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குரோஷியா - ஸ்பெயின் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 20 நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் பெத்ரி அடித்த சுய கோல் மூலம் குரோஷியா கோல் கணக்கை தொடங்கியது. தொடர்ந்து ஸ்பெயின் வீரர் சரபியா 38வது நிமிடத்திலும், அஸ்பிலிகுயடா 57வது நிமிடத்திலும், ஃபெரன் 77வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். அதனால் ஸ்பெயின் 3-1 என முன்னிலை பெற்று வெற்றியை நெருங்கியது. ஆனால், விடாப்பிடியாக போராடிய குரோஷிய அணிக்கு ஆர்சிக் (85வது நிமிடம்), பசலிக் (90’+2) கோல் அடிக்க ஆட்டம் டிராவானது.
அதன் பிறகு கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அதில் ஸ்பெயின் வீரர்கள் மொராட்டா, ஒயர்சாபல் ஆகியோர் அடுத்தடுத்து கோலடித்தனர். அதனால் ஸ்பெயின் 5-3 என்ற கோல் கணக்கில் போராடி வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
மேலும் செய்திகள்
ரஞ்சி அரையிறுதி இன்று தொடக்கம் முன்னாள் சாம்பியன்கள் கர்நாடகா - சவுராஷ்டிரா மோதல்
சர்வதேச கிரிக்கெட் பிஞ்ச் ஓய்வு
சில்லி பாயின்ட்...
நாக்பூரில் நாளை மறுநாள் முதல் டெஸ்ட் தொடக்கம்; 4 ஸ்பின்னர்களுடன் களம் இறங்க இந்தியா திட்டம்
கில் தொடக்க வீரராக இருக்க வேண்டும்: ஹர்பஜன்சிங் பேட்டி
இந்தியாவை வென்றால் ஆஷஸை விட பெரிதாக இருக்கும்: ஸ்டீவ் ஸ்மித் பேட்டி
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!