SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வரி ஏய்ப்பு செய்யும் வணிகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

2021-06-25@ 17:10:42

சென்னை : சென்னை தி.நகரில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் கலந்துறையாடலில் ஈடுபட்டு வருகிறார். இக்கூட்டத்தில் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 17 சட்டமன்ற உறுப்பினர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள் மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா, வணிக வரித்துறை ஆணையர் சித்திக் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்......

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்ததாவது...வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக ஆன்லைன் பதிவு நடைபெற்று வருகிறது .. தொடர்ந்து மாவட்ட வாரியாக அதிகாரிகளை நியமிக்கும் பணியும் விரைவில் நடைபெறும்...

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் மற்றும் தமிழக அரசின் சார்பில் மேல்மட்டத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது விரைவில் விலை குறைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்...ஜிஎஸ்டி க்கு முன்பு வாட் வரி அமலில் இருந்த காலத்தில் தொடரப்பட்ட வழக்குகள் இன்றளவும் நிலுவையில் உள்ள நிலையில்  அந்த வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.போலி பில் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது ...பொருட்களை விற்பனை செய்யாமல் பில் மட்டும் வரி ஏய்ப்பு செய்யும் வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

  • cryingroom-19

    இனி வீட்டில் அழுகாதீங்க!: மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்க்க ஸ்பெயினில் 'அழுகை அறை' அறிமுகம்..!!

  • baloon111

    பலூனை தட்டி விளையாடுபவர்களுக்கான உலகக் கோப்பை டோர்னமென்ட்: ஸ்பெயினில் வினோதம்!!

  • Turkeygirr1

    7 அடி 7 அங்குலம் உயரம் கொண்ட துருக்கியைச் சேர்ந்த ருமேசா கெல்கி உலகின் உயரமான பெண்ணாகத் தேர்வு!!

  • farmer-rail-18

    லக்கிம்பூர் படுகொலைக்கு நீதிகேட்டு வடமாவட்டங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்...ஸ்தம்பித்த ரயில் போக்குவரத்து..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்