SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்டா பிளஸ் வைரஸை தடுக்க தடுப்பூசிகள் எந்தளவுக்கு உதவும்?: கொரோனா 3வது அலையை தடுக்க என்ன திட்டம்?..பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி..!!

2021-06-25@ 12:26:43

டெல்லி: கொரோனா 3வது அலையை தடுக்க ஒன்றிய அரசிடம் என்ன திட்டம் உள்ளது என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் கொரோனா கிருமி, இந்தியாவில் 40க்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் மத்தியப்பிரதேசத்தில் ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, டெல்டா பிளஸ் வைரஸை கண்டறியவும், தடுக்கவும் அதிக அளவிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். 


டெல்டா பிளஸ் வைரஸை தடுக்க தடுப்பூசிகள் எந்த அளவுக்கு உதவும்? என்றும் இது தொடர்பான முழு விவரம் எப்போது கிடைக்கும்? என்றும் அவர் வினவியுள்ளார். கொரோனா 3வது அலையை தடுக்க என்ன திட்டம் உள்ளது? என்றும் பிரதமர் நரேந்திர மோடியிடம் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • petrol,disel-4

    எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றம் நோக்கி எதிர்க்கட்சி தலைவர்கள் சைக்கிள் பேரணி!: புகைப்படங்கள்

  • kalingar-pic-3

    காலம் பொன் போன்றது... கடமை கண் போன்றது!: தமிழக சட்டப்பேரவைவில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படம் திறப்பு..புகைப்படங்கள்..!!

  • turkey-fire-3

    துருக்கியில் அதிதீவிரமாக பரவி வரும் காட்டுத்தீயால் ஒரு நகரமே கருகியது!: ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து பரிதவிப்பு..!!

  • jammu-flood-29

    ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலில் மேக வெடிப்பால் பெருவெள்ளம், நிலச்சரிவு!: 22 பேர் உயிரிழப்பு..பலர் மாயம்..!!

  • u.p.lorry-bus-acc

    உ.பி.யில் கோர விபத்து!: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்