SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழக கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

2021-06-25@ 11:31:37

சென்னை: தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை நந்தனத்தில் உள்ள அரசு ஆடவர் கல்லூரியில் இதற்கான விழா நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற விழாவில் கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. 


இதே விழாவில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட சமையல் பொருட்கள் அடங்கிய தொகுப்பினையும் பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதன் மூலம் குடும்ப அட்டை இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 1 லட்சத்து 29 ஆயிரம் பேர் பயன்பெறுகின்றனர். இந்த விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • petrol,disel-4

    எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றம் நோக்கி எதிர்க்கட்சி தலைவர்கள் சைக்கிள் பேரணி!: புகைப்படங்கள்

  • kalingar-pic-3

    காலம் பொன் போன்றது... கடமை கண் போன்றது!: தமிழக சட்டப்பேரவைவில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படம் திறப்பு..புகைப்படங்கள்..!!

  • turkey-fire-3

    துருக்கியில் அதிதீவிரமாக பரவி வரும் காட்டுத்தீயால் ஒரு நகரமே கருகியது!: ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து பரிதவிப்பு..!!

  • jammu-flood-29

    ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலில் மேக வெடிப்பால் பெருவெள்ளம், நிலச்சரிவு!: 22 பேர் உயிரிழப்பு..பலர் மாயம்..!!

  • u.p.lorry-bus-acc

    உ.பி.யில் கோர விபத்து!: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்