SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை வழங்காமல் தேர்தலை மட்டும் நடத்த முயற்சிப்பது வினோதமானது: ப. சிதம்பரம் ட்வீட்

2021-06-25@ 10:32:14

டெல்லி : ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை வழங்காமல் தேர்தலை மட்டும் நடத்த முயற்சிப்பது வினோதமான நடவடிக்கை என்று ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார் ஜம்மு - காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலை நடத்துவது குறித்த பிரதமர் மோடி உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான தலைவர்கள் மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தேர்தலுக்கு பின்னர் மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.

அனைத்து கட்சி கூட்டம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம், காங்கிரஸ் மற்றும் ஜம்மு - காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் முதலில் மாநில அந்தஸ்து பின்னர் தேர்தல் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர்.ஆனால் முதலில் தேர்தல் அடுத்ததாக மாநில அந்தஸ்து என்று ஒன்றிய அரசு கூறுகிறது. மாநில தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படும் போது தான், தேர்தல் நடத்தப்பட வேண்டும். வண்டியை இழுக்கும் குதிரையை முன்னாள் கட்டாமல் வண்டிக்கு பின்னால் நிறுத்தும் அரசின் நடவடிக்கை வினோதமானது என்று ப. சிதம்பரம் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • petrol,disel-4

    எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றம் நோக்கி எதிர்க்கட்சி தலைவர்கள் சைக்கிள் பேரணி!: புகைப்படங்கள்

  • kalingar-pic-3

    காலம் பொன் போன்றது... கடமை கண் போன்றது!: தமிழக சட்டப்பேரவைவில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படம் திறப்பு..புகைப்படங்கள்..!!

  • turkey-fire-3

    துருக்கியில் அதிதீவிரமாக பரவி வரும் காட்டுத்தீயால் ஒரு நகரமே கருகியது!: ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து பரிதவிப்பு..!!

  • jammu-flood-29

    ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலில் மேக வெடிப்பால் பெருவெள்ளம், நிலச்சரிவு!: 22 பேர் உயிரிழப்பு..பலர் மாயம்..!!

  • u.p.lorry-bus-acc

    உ.பி.யில் கோர விபத்து!: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்