SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் 12 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!: 100 பேர் பலி?..இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரம்..!!

2021-06-25@ 10:07:08

வாஷிங்டன்: அமெரிக்காவில் 12 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்த விபத்தில் 100 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. புளோரிடா மாநிலம் மியாமி கடற்கரையை ஒட்டிய சர்சைட் என்ற பகுதியில் ஏராளமான பிரம்மாண்ட அடுக்குமாடி கட்டிடங்களும், ஹோட்டல்களும் உள்ளன. இதில் 12 அடுக்கு குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதி நேற்று நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து வந்த காவல் மற்றும் தீயணைப்பு படையினர், விரைந்து செயல்பட்டு இடிபாடுகளில் இருந்து 102 பேரை பத்திரமாக மீட்டனர். 


படுகாயமடைந்த 15 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி கொண்டுள்ளதால் அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முடிக்கிவிடப்பட்டுள்ளன. பேரிடர் மீட்பு படையினர் மோப்ப நாய்களின் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடி வருகின்றனர். கட்டிட இடிபாடுகளில் இருந்து ஒரு உடல் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில் 99 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது. 


எஞ்சியுள்ள கட்டிடத்தின் பகுதிகளும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து அனைவரும் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இடிபாடுகளில் சிக்கி இருப்போரை பாதுகாப்பாக மீட்பதற்காக ராணுவம் மியாமி நகருக்கு வந்துள்ளது. 12 மாடி கட்டிட விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • petrol,disel-4

    எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றம் நோக்கி எதிர்க்கட்சி தலைவர்கள் சைக்கிள் பேரணி!: புகைப்படங்கள்

  • kalingar-pic-3

    காலம் பொன் போன்றது... கடமை கண் போன்றது!: தமிழக சட்டப்பேரவைவில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படம் திறப்பு..புகைப்படங்கள்..!!

  • turkey-fire-3

    துருக்கியில் அதிதீவிரமாக பரவி வரும் காட்டுத்தீயால் ஒரு நகரமே கருகியது!: ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து பரிதவிப்பு..!!

  • jammu-flood-29

    ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலில் மேக வெடிப்பால் பெருவெள்ளம், நிலச்சரிவு!: 22 பேர் உயிரிழப்பு..பலர் மாயம்..!!

  • u.p.lorry-bus-acc

    உ.பி.யில் கோர விபத்து!: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்