SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் அடுத்து என்ன தளர்வுகள் வழங்கலாம்? அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

2021-06-25@ 09:09:17

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்து புதிய தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு அரசு உயர் அதிகாரிகள், மருத்துவர்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். 3 வகையாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் 28-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவதால் ஆலோசிக்கிறார்.  இந்த நிலையில் 6-வது முறையாக ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதலாக என்னென்ன தளர்வுகள் வழங்கலாம்? என்பது தொடர்பாகவும் இன்று தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். 


அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. 5 முறை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் தொற்று பரவல் நன்றாக குறைந்து வருகிறது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு 28-ம் தேதி முடிகிறது. தமிழகத்தில் தொற்று பரவல் அதிகரித்திருந்த நிலையில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி மே 24-ம் தேதியில் இருந்து 31-ம் தேதிவரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு படிப்படியாக ஒவ்வொரு வாரமாக நீட்டிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • petrol,disel-4

    எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றம் நோக்கி எதிர்க்கட்சி தலைவர்கள் சைக்கிள் பேரணி!: புகைப்படங்கள்

  • kalingar-pic-3

    காலம் பொன் போன்றது... கடமை கண் போன்றது!: தமிழக சட்டப்பேரவைவில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படம் திறப்பு..புகைப்படங்கள்..!!

  • turkey-fire-3

    துருக்கியில் அதிதீவிரமாக பரவி வரும் காட்டுத்தீயால் ஒரு நகரமே கருகியது!: ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து பரிதவிப்பு..!!

  • jammu-flood-29

    ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலில் மேக வெடிப்பால் பெருவெள்ளம், நிலச்சரிவு!: 22 பேர் உயிரிழப்பு..பலர் மாயம்..!!

  • u.p.lorry-bus-acc

    உ.பி.யில் கோர விபத்து!: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்