SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நோ கட்டிப்பிடி.... நோ கையெழுத்து...ஒலிம்பிக் ரசிகர்களுக்கு கட்டுப்பாடு

2021-06-24@ 00:57:11

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டியின்போது ரசிகர்கள்    வீரர்களை  கட்டிப்பிடிக்கக்  கூடாது,  ஆட்டோகிராப் வாங்கக் கூடாது என்று ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை டோக்கியோ ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில்  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டி, கொரோனாவால்  இந்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி ஜூலை 23ம் தேதி போட்டி தொடங்க உள்ளது. ஜப்பான் உட்பட பல நாடுகளில் இன்னும் கொரோனாவின் வீச்சு குறையாததால்  போட்டியை நடத்த ஜப்பானில் கடும் எதிர்ப்பு உள்ளது. ஆனால் போட்டியை நடத்துவதில் ஜப்பான் அரசும், சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலும் உறுதியாக உள்ளன.

ஒவ்வொரு போட்டியையும் காண தலா 10 ஆயிரம் ரசிகர்களை அனுமதிக்க உள்ளதாகவும்  கடந்த வாரம் டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. ரசிகர்களுக்கான கட்டுப்பாடுகளை கொண்ட  கையேட்டை நேற்று வெளியிட்டது.
* முகக்கவசம் கட்டாயம். கைகளை கழுவும்போது பயன்படுத்த டவல் அல்லது கைக்குட்டை எடுத்து வர வேண்டும்.
* போட்டி தொடங்குவதற்கு முன்பே அரங்கிற்கு வந்துவிட வேண்டும்.  நிறைய பொருட்களுடன் அரங்கிற்குள் வருவதை தவிர்க்க வேண்டும்.
* அரங்கில் நுழைவதற்கு முன்பு உடல் வெப்ப பரிசோதனை உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

* தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வரிசையில் நிற்கும் போதும், உட்காரும் போதும் மற்றவருடன் 2 மீட்டர் இடைவெளி அவசியம். பொது வாகனங்களில் வரும்போதும் இந்த முன்னெச்சரிக்கை வேண்டும்.
* தனி பயன்பாட்டுக்கான கிருமிநாசினிகளையும்  கைவசம் வைத்திருக்க வேண்டும்.
* உடல் நலமில்லை என்றால் அரங்கிற்குள் வருவதை தவிர்ப்பது நல்லது.
* ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்ட  செயலியை ஒவ்வொரு ரசிகரும்  பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.  

* அரங்கில் வந்த பிறகு உங்களுக்கு ஏதாவது உடல் நலக் குறைபாடு தெரியவந்தால், தயங்காமல் அரங்க பணியாளரிடம் தெரிவித்து உதவி கோரலாம்.
* போட்டி நடைபெறும் அரங்கிற்கு மதுவகைகளை கொண்டு வரவோ,  அரங்கில் வைத்து அருந்தவோ அனுமதி கிடையாது. அரங்கில் மது விற்பனை கிடையாது.
* குழுவாக உட்கார்ந்து சாப்பிட அனுமதி கிடையாது.

* வீரர்களை  கட்டிப்பிடிக்க, கை குலுக்க அனுமதியில்லை. ஆட்டோகிராப் வாங்க அனுமதி கிடையாது.
* கைத்தட்டி, விசிலடித்து, சத்தம்  போட்டு உற்சாகப்படுத்தலாம்.  கையில் வைத்திருக்கும்  கைத்துண்டு அல்லது கைக்குட்டையை அசைத்தும் ஆர்வத்தை தெரிவிக்கலாம்.
* வீரர்களிடம் மட்டுமின்றி, சக ரசிகர்களையும் கட்டிப்பிடிப்பது, அவர்களுடன்  கை குலுக்குவது, அருகில் செல்வது என கொரோனா பரப்பும் நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்.
இப்படி பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்ட 18 பக்க  கையேட்டை  ரசிகர்களுக்காக டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • china-1000-rains

  சீனாவில் 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த பெருமழை!: தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்..!!

 • girlss_saydi

  சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண் ராணுவத்தினர்!!

 • amesaann11

  அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸின் முதல் விண்வெளி சுற்றுலா பயணம் : மெய்சிலிர்க்க வைக்கும் படங்கள்!!

 • marina-sculptures22

  மெரினாவின் அழகை மெருகூட்டும் பிரம்மாண்ட உலோக சிற்பங்கள்!: சென்னை மாநகராட்சியின் சிறந்த முயற்சி..!!

 • 5starrrr

  5 -ஸ்டார் ஹோட்டல்.. பிரார்த்தனை கூடம், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை : விமான நிலையம் பாணியில் குஜராத் ரயில் நிலையம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்