SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா கொடூரம்: ஒலிம்பிக் போட்டிகளை காண 10 ஆயிரம் பார்வையார்களுக்கு மட்டும் அனுமதி

2021-06-21@ 18:59:56

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பிரம்மாண்ட விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளை காண 10 ஆயிரம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் டோக்கியோ நகரில் அடுத்த மாதம் 23-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இதற்காக டோக்கியோ நகர் ஜோராக தயாராகி வருகிறது. கொரோனா பரவல் சூழலில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதால் கடும் கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளை நேரில் காண்பதற்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா என தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. இந்நிலையில் கொரோனாவால் 10 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி வழங்கி அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும் போட்டியில் கலந்து கொள்பவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

  • iceland-16

    ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

  • dolphins-15

    டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்