SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆதம்பாக்கம், திருவொற்றியூர் பகுதியில் போதை தகராறில் இருவர் கொலை

2021-06-21@ 00:25:42

சென்னை: ஆதம்பாக்கம் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் ரசம் (எ) அஜித்குமார் (22), ரவுடி. இவர், நேற்று முன்தினம் இரவு அதே பகுதி மண்ணடியம்மன் கோயில் தெருவை சேர்ந்த எட்வின் (எ) கார்த்திக் (25), ரவி (25), தினேஷ் (28) ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். பின்னர், ரவியும், தினேசும் அங்கிருந்து வீடடிற்கு சென்று விட்டனர். கார்த்திக் மற்றும் அஜித்குமார் மட்டும் தொடர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, யார் பெரிய ரவுடி என்பதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.  ஆத்திரமடைந்த கார்த்திக் அஜித்குமாரை தாக்கி கிழே தள்ளி, அருகில் இருந்த கான்கிரீட் பூந்தொட்டியை எடுத்து அவரது தலையில் போட்டுள்ளார். இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இதனையடுத்து கார்த்திக் அங்கிருந்து தப்பினார். தகவலறிந்து வந்த ஆதம்பாக்கம் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

 மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார்த்திக் கடந்த ஆண்டு  பிரபல பெண் தாதா பவுளினாவின் மகன் மணிகண்டனை கொலை செய்த வழக்கில் சிறைக்கு சென்று, தற்போது ஜாமீனில் வெளியில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு சம்பவம்: திருவொற்றியூர் ஒண்டிகுப்பம் பெருமாள் கோயில் பூங்காவனம்புரத்தை சேர்ந்தவர் குப்பன் (46), மீனவர். இவர், கடந்த 17ம் தேதி அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் மோகன் (36), ரகு (45), துரைராஜ் (56) ஆகியோருடன் மது அருந்தியபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவருக்கொருவர் கட்டை மற்றும் கற்களால் தாக்கிக் கொண்டனர்.
 
இதில், குப்பன் படுகாயமடைந்து, மயங்கினார். தகவலறிந்து வந்த திருவொற்றியூர் போலீசார், குப்பனை மீட்டு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து, அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி மோகன், ரகு ஆகியோரை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள துரைராஜை தேடி வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • etna-volcano-23

  இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!

 • sandjakki11

  "மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!

 • ooty_flower

  பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

 • bharat111

  சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

 • charles_kameela

  3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்