SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராஜபாளையத்தில் உலர் களங்கள் இல்லாததால் தார்ச்சாலைகளுக்கு ஆபத்து

2021-06-19@ 12:28:26

ராஜபாளையம் : ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உலர்களம் இல்லாததால் சாலைகளில் விவசாயக் கழிவுகளை கொட்டி தீ விவசாயிகள் வைப்பதால் சாலைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ராஜபாளையம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது பயிரான எண்ணெய் வித்துக்கள் மற்றும் பயறு வகைகளை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர் அதனை அளவுக்கு அதிகமாக தார்ச்சாலைகளில் உலர வைத்து பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அதில் ஏற்படும் கழிவுகளை அப்புறப்படுத்தாமல் சாலைகளில் போட்டு விடுவதால் அதனை ஒரு சிலர் தீ மூட்டி விடுகின்றனர் இதனால் தார்ச்சாலைகள் உருகி சேதம் ஏற்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டு சாலை விபத்துகளும் ஏற்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், விவசாயிகளுக்கு தேவையான உலர் களம் இல்லாததால் தார்ச்சாலைகளில் பயிர்களை உலர்ந்த பயன்படுத்துகின்றனர். அப்போது ஏற்படும் விவசாயக் கழிவுகளை அப்புறப்படுத்தாமல் விட்டுச் செல்வதால் தார்ச்சாலைகள் சேதம் ஏற்பட்டு வருகிறது. எனவே, இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க விவசாயிகளுக்கு உலர்களம் அமைத்து தர வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china-1000-rains

    சீனாவில் 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த பெருமழை!: தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்..!!

  • girlss_saydi

    சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண் ராணுவத்தினர்!!

  • amesaann11

    அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸின் முதல் விண்வெளி சுற்றுலா பயணம் : மெய்சிலிர்க்க வைக்கும் படங்கள்!!

  • marina-sculptures22

    மெரினாவின் அழகை மெருகூட்டும் பிரம்மாண்ட உலோக சிற்பங்கள்!: சென்னை மாநகராட்சியின் சிறந்த முயற்சி..!!

  • 5starrrr

    5 -ஸ்டார் ஹோட்டல்.. பிரார்த்தனை கூடம், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை : விமான நிலையம் பாணியில் குஜராத் ரயில் நிலையம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்